பக்கம்:மறைமலையம் 11.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

❖ - 11❖ மறைமலையம் – 11

8. உதிர்மலர்

பொழிவாலும் நூலாலும் தென்றல் உலாவாகவும் தேனருவி யாகவும் திகழ்ந்த அடிகளார், பேராப்பெருநிலையற்ற செய்தியாக வருவது இவ்வுதிர் மலர்.

கொடியில் அரும்பிய மலர், பொழுதில் மலர்ந்து, அலர்ந்து திர்தல் இயற்கை அல்லது ஊழ்; ஊழ்மலர் எனலும் இணரூழ்த்தல் எனலும் பழநூல் ஆட்சிகள்”

கொடியில் இருந்து மலர் உதிர்வதுபோல் அரற்றல் அவலம் ன்றி உயிர் நீத்தல் வேண்டும் என்பது மெய்ப் பொருள் உணர்ந்தோர் வேட்புரை.

தொடர் இடிபாடுகள் :

அடிகளார் உள்ளத்தையும்

அசைக்கும் சூழல்கள்

அமைந்தன. ஈருயிர் ஓருடலாக அரங்கரும் அம்பிகையாரும் வாழ்வதாக எவ்வளவு மகிழ்வில் இருந்தாரோ அடிகள்

அதற்கொரு பெருந்தடையுண்டாயிற்று”

அரங்கனார் அயரா உழைப்பர்; உழைப்பின்போது ஓய்வு அறியார்; அவர்க்கு நெஞ்சுவலி வருத்தியது; அவர் தம் அருமைச் செல்வி முதன்மகள் மங்கையர்க்கரசி பூத்துக் குலுங்கும் பூங்கொடியாய்த் திகழும் பன்னிரண்டாம் அகவையில் இயற்கை எய்தினாள்" அவள்மேல் ஆராத அன்பு கொண்டிருந்த அரங்கரை அப் பிரிவு பெரிதும் வாட்டியது.

இவ் வாட்டுதல் இடையே ஆரூயிர் அம்பிகையார் பெரும் பாடு என்னும் நோயால் பற்றப்பட்டார். முன்னமே பத்தாண்டுகள் இளைப்பு இருமலால் அல்லல் உற்ற அவர் - அடிக்கடி மக்களைப் பெற்ற அவர் இந் நோய்க்கும் ஆட்பட்டமை மேலும் வாட்டுதல் ஆயிற்று.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/253&oldid=1580210" இலிருந்து மீள்விக்கப்பட்டது