பக்கம்:மறைமலையம் 11.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

229

முடிவில் தொகுத்துரைக்கும் திறம் அடிகளார்க் கென்றே அமைந்த அரும்பண்பாகும்.

அடிகளார் முடியைப் பற்றி முதுபெரும் புலவர் ஒருவர் எள்ளற் குறிப்புடன் பேசினர். தலைமை ஏற்றிருந்த அடிகளார் புலவர் அவர்களின் மயிராராய்ச்சி மிக நன்று என்று சொல்ல அவை மகிழ்வாரவாரம் செய்தது.

ஒளவை சு- துரைசாமியார்

மறைமலையடிகளும் கா. சு. பிள்ளையும் என் வலக்கையும் இடத்தைப் போன்றவர்கள்.

-

தந்தை பெரியார்.

இருபதாம் நூற்றாண்டின் தமிழ் வரலாற்றில் மானுடம் இவர்தாம் அல்லர்; நம் பெரும் தெய்வம்” எனத் திகழ்ந்திருந்து அரும்பெருந் தொண்டுகள் ஆற்றியுள்ள மறைமலையடிகளுக்கு ரு பெரும் தனிச் சிறப்பிடம் உண்டு. தமிழுக்கும் சமயத்திற்கும் சமுதாயத்திற்குமாகப் பல்வேறு துறைகளில் அளப்பரும் தொண்டுகள் ஆற்றியவர் அப் பெருந்தகையாளர்.

- ந. ரா. முருகவேள்.

என்பும் உருகும் இசைபாடும் பண்புடையவர் இவர். இல்லறத் துறவியாகத் தம் இல்லின்கண் வீற்றிருந்து நல்லறம்புரிந்த நற்றமிழ் நாவலர் இவர். தமிழ்ப்பாலொடு எந்த நஞ்சையும் கலவாது தமிழ்க் குழவிகளுக்கு ஊட்டியவர்.

அ. கனகராயர்

மறைமலை அறிவூற்று ஊறிய மாமலை. பல்வகைக் கருத்து வளம் கொழித்த மாமலை; அயல் வழக்கின் களைகடுத்த மாமலை; மறைமலையடிகள் ஒரு தமிழ்நிறுவனம்; சமய இயக்கம்; அவர்தம் எழுத்தும் பேச்சும் ஒரு புதிய தலைமுறையையே தோற்று வித்திருக்கிறது.

- தவத்திரு குன்றக்குடியடிகளார்.

கடலின் ஆழத்தையும் அகலத்தையும் அறியமுடியாது என்பார்கள். அதுபோலவே தவக்கோலத்தில் இருந்த தமிழ்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/262&oldid=1580219" இலிருந்து மீள்விக்கப்பட்டது