246
மறைமலையம் – 11 11 ✰
வெள்ளிகள் அளிக்கவேண்டுமென்றும், அடிகள் தம்மால் இயற்றப்பெற்ற நூல்கள் நான்கும் அடியேற்கு அளிக்க வேண்டுமென்றும் குறித்துள்ளார்.
இவ்வண்ணம் எந்நேரமும் உயிர் ஓம்பலும், உடல் ஓம்பலும், தமிழ் ஓம்பலும் செய்து வருங்கால உலகிற்கு வழி காட்டியாய், கற்றவரும் மற்றவரும் வியக்கும் ஒரு நல்ல தமிழாசிரியராய் அடிகளார் விலைமதிக்க முடியாத தொண்டு செய்துவிட்டுத் தமிழ் நாட்டினர் செய்த தவப்பயன் குறைவால் நம்மைத் தனித்தேங்கவிட்டு உம்பர் உலகு உற்றனர்.
உறுக அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நீழலில்! வாழ்க தமிழகம்! வெல்க தமிழ்!
அடிகளாரின் அன்றாட நிகழ்ச்சி முறை
6 மணி முதல் 7 மணிவரை
1. க கடவுளை வணங்கிக்கொண்டே
காலையில்
துயிலெழுதல், பின்னர்த் தேவார திருவாசகப் பாடல்களைப் பாடிக்கொண்டே தாமே மாளிகையின் சன்னல்களைத் திறந்து கண்ணாடிக் கதவுகளைத் துணியால் தட்டித் தூய்மை செய்தல்.
7 மணிமுதல் 8 மணிவரை
2. தோட்டத்தைச் சுற்றிக்கொண்டே உலவுதல், பல் துலக்குதல்.
8 மணிமுதல் 8.30 மணிவரை
3. நீரேற்றி (Enama) கொண்டு மலக்குடலைத் துப்புரவு செய்தல்.
8.30 மணிமுதல் 9 மணிவரை
4. சிறிது வெப்பமான நீரில் குளித்தல், தோய்த்துலர்ந்த துணிகளை உடுத்தல்.
9 மணிமுதல் 9-30 மணிவரை
5. நாள்தோறும் உட்கொள்ளும் உப்பினை (Efforsol) உட்கொள்ளுதல், உடல் நலமில்லாதிருப்பின் அதற்கேற்ற மருந்து வகைகளை உட்கொள்ளுதல். (நீர்க் கோவையானால் சூடான