பக்கம்:மறைமலையம் 11.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

255

பல

எழுதவும் பயிலவும் தெரிந்தவர் அல்லர். தென்னாட்டகத்தே யிருந்த தம் இனத்தாரைப் போல் நாகரிக வாழ்க்கையில் இருந்தவரும் அல்லர். வடக்கே சென்று குடியேறிய அப்பெருந்தொகுதியாரிற் சிறந்த சிறுசிறுகுழுவினர் நூற்றாண்டுகளுக்குப் பின் மீண்டும் இத்தென்னாடு புகுந்து ஆங்காங்கு வைகலாயினர். இங்ஙனம் வந்தார் அனைவரும் வடநாட்டில் வைகிய காலத்தே, தாம் பேசும் மொழியாலுந், தாம் கைக்கொண்ட பழக்க வழக்கங்களாலும், அவற்றால் தாம் விடாப்பிடியாய்க் கொண்ட கொள்கைகளாலும் இவ்விந்திய நாட்டுக்குப் புறம்பேயிருந்து போந்து தம்மோ டொருங்கு கலந்து வாழ்ந்த ஆரிய மக்களின் சேர்க்கையாலுந், தாந் தெற்கேயிருந்த தமிழர்களுக்குப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமே நெருங்கிய உறவினராயிருந்தும் அவரைப் பிரிந்து நெடுங்காலங் கழிந்தமையின், அவர் தம்மினத்தவராதலை அறவே மறந்து, ஆரியச் சேர்க்கையால் தம்மை ஆரியரெனவே பிறழ உணர்ந்து, தென்னாட்டவருடனும் அவர்தம் வழக்க வொழுக்கங்களுடனும் முழுதும் மாறுபட்டே நிற்பராயினர்.

மறைமலையடிகள்.

ஓம்

பல்லாவரம், 8-11-1949

அன்பர் கனகராயர்க்குத் திருவருளால் எல்லா நலனும் உண்டாகுக!

யான்

பனிமிகுதியால் எனக்கு நீர்க்கோவை. ஆதலால் நாளைக்கு சென்னை வருதல் யலாதாயிற்று. கூடுமானாற்

சனிக்கிழமை வருகிறேன்.

நமது நூற்பதிப்பு வேலையை விரைவில் வாங்குதற்கு வேண்டும். ஏற்பாடுகளை நம் அன்பர் திரு. செங்கல்வராயருடன் கலந்து விரைவிற் செய்யுங்கள். பிறபின். நலம்.

அன்புள்ள. மறைமலையடிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/288&oldid=1580249" இலிருந்து மீள்விக்கப்பட்டது