பக்கம்:மறைமலையம் 11.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்ப

263

வேறுசில சிறு தெய்வங்களையும் வணங்கி, அவற்றுக்காகப் பல கோடிக்கணக்கான கோழிகளையும் ஆடுகளையும் வெட்டிப் பலியிடுகின்றார்கள். இக்கொடிய செயலை அவர்கள் அறவே விடுமாறு செய்து, சிவம் அல்லது திருமால் என்னும் ஒரு தெய்வத்தையே வணங்கும்படி செய்தல் வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள மக்கள் ஊன்தின்பவரும் ஊன்தின்னாத சைவரும் என்னும் இரு பெரும்பிரிவில் நின்றாற் போதும். சைவரிலேயே பல வகுப்புகளும், அங்ஙனமே ஊன்தின்பவர்களிற் பலப் பல வகுப்புகளும் இருத்தல், பொருளற்ற வேற்றுமையாய் ஓயாத சாதிச்சண்டைகளை உண்டாக்குவதாய் இருக்கின்றது. பொருளற்ற இவ்வேறுபாடுகளை முற்றும் ஒழிப்பதற்கு எல்லாரும் பெருமுயற்சி செய்தல்வேண்டும்.

ஊன் தின்னும் வகுப்பினரிலும் அருளொழுக்க முடைய ராய்ச் சைவ உணவுகொண்டு சிவத்தையே வணங்கும் அன்பு மிகுந்து தூயராய் வருவாரைச் சைவராயிருப்பவர்கள் தம்முடன் சேர்த்துககொண்டு அவர்களோடு ஏதெரு வேறுபாடு மின்றி உண்ணல் கலத்தல்களைச் செய்தல்வேண்டும். கல்வியிலும் நுண்ணறிவிலும் சிவநேய அடியார் நேயங்களிலும் அருளொழுக்கத்திலும் சிறந்தார்க்கே உயர்வுகொடுக்க வேண்டுமேயல்லாமல் வெறும் பிறப்புப் பற்றி இவ்வியல்புகள் இல்லார்க்கு உயர்வுகொடுத்தல் ஆகாது. என்றாலும், எவரையும் பகையாமல் அவரவர்க்கு வேண்டு முதவிசெய்து, எல்லாரோடும் அன்பினால் அளவளாவுதல்வேண்டும். சத்திரஞ் சாவடிகளிலும் சிறப்பு நாட்களிலும், பிறப்பால் உயர்ந்தவரென்று சொல்லிக் காள்ளும் ஒருவகுப்பினர்க்கே உணவுகொடுத்தல் பொருள் கொடுத்தல் முதலிய அறங்களைக் குருட்டுத் தனமாய்ச் செய்கின்றார்கள். இதுவும் அறவே தொலைக்கப்படுதல் வேண்டும். உயர்வு தாழ்வு கருதாது அறஞ் செய்யத் தக்கார் எவரைக்காணினும் அவர்க்கு அறஞ் செய்தலே தக்கது.

மாணிக்கவாசகர் அப்பர் சம்பந்தர் சுந்தரர் முதலான நம் சமயாசிரியர்கள் பௌத்த சமணமதங்களில் இருந்து சைவ சமயம் தழுவவிரும்பினாரை அங்ஙனம் சைவ சமயத்திற் சேர்த்து அதனைப் பரவச்செய்திருக்கின்றார்களாதலால், நம் ஆசிரியர் காட்டிய அந் நன்முறையைக் கடைப்பிடித்து நாமும் அயற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/296&oldid=1580257" இலிருந்து மீள்விக்கப்பட்டது