பக்கம்:மறைமலையம் 11.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்ப உ

265

முப்பதாண்டுகட்கு உட்பட்ட பெண்கள் கணவனை இழந்து டுவார்களானால், அவர்களைத் திரும்ப மணஞ்செய்து காடுத்தல்வேண்டும். ஆண்மக்களில் நாற்பதாண்டுக்கு மேற்பட்டவர்கள் இளம்பெண்களை மணஞ்செய்தல் ஆகாது. அப்படிச்செய்ய முந்துகின்றவர்களை எல்லாவகையாலும் தடை செய்தல் வேண்டும். நாற்பதாண்டுக்கு மேற்பட்ட ஆண்பாலார் மணஞ்செய்துகொள்ள வேண்டுவார்களானால் தம் ஆண்டுக்கு ஏறக்குறைய ஒத்த கைம்பெண்களையே அவர்கள் மணஞ்செய்து கொள்ளும்படி தூண்டுதல் வேண்டும்.

தமிழ்மக்களிற்

பெரும்பாலார்

ஒருவர்பாலுள்ள குற்றங்களை மற்றவர் எடுத்துப் பேசுபவராய்ப் பகைமையையும் மனவருத்தத்தையும் பரவச்செய்து வருகின்றார்கள். இத்தீய பழக்கத்தை ஒழித்தால் அன்றித் தமிழ்மக்கள் முன்னேற்ற மடைவது சிறிதும் முடியாது. ஒருவர்பாலுள்ள குற்றங்களை மறைத்து அவர்பாலுள்ள நலங்களை எடுத்துப்பேசுவதற்கு எல்லாரும் விடாப்பிடியாய்ப் பழகுதல் வேண்டும். ஒவ்வொரு வரும் தங்கள் தங்களால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு மனமாரச்செய்து, அவர்களை மேன் மேல் உயர்த்திவிடுதல் வேண்டும். தாம்செய்யும் உதவிக்குக் கைம்மாறாவதொன்றை எதிர்பார்த்திருத்தல் ஆகாது. அப்போதுதான் நம்முடைய மக்கள் உண்மையான முன்னேற்றத்தை அடைவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/298&oldid=1580259" இலிருந்து மீள்விக்கப்பட்டது