பக்கம்:மறைமலையம் 11.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

❖ 11❖ மறைமலையம் – 11

11

தமிழிந்திய மாது

(சிறந்த பண்டைத் தமிழ் நாகரிகத்தை முன்னிலைப்படுத்திக் கூறிய பாக்கள்)

இராகம் (இசை - பைரவி)

தாவு கொச்சகக் கலிப்பா

வளம்பழுத்த விளைநிலமே விழிதிரும்பும் வழியெல்லாம் குளம்பெருக்கும் அருவிவருங் குன்றுகளே குலவுவன

இளம்பருவச் சோலைகளே கருங்காடே எங்குமாய் உளம்பழுத்த மூதறிஞர் உயிராகும் உனக்கன்னாய்.

விரிந்தபெரு ஞாலத்தில் வேறுபல தேயத்தில்

(1)

விரிந்திருந்த மக்களெலாம் பேதையராய் இருந்த அந்நாள் தெரிந்துபல கலைகளெலாம் தெளிவாக மிகவிளக்கி வரிந்தனர்நின் மகார்எனிலுன் வளர்பெருமை சொலலரிதே.

(2)

அலையுலவும் வங்காளக் குடாக்கடலின் அடிக்கிடக்கும் விலைவரம்பு காணாத முழுமுத்தும், மேலுயர்ந்த

மலையருவி கொழித்துவரும் மணிகளொடு, பசும்பொன்னும் தலையணியப் பிறநாட்டார் தந்தனைஇந் தியமாதே.

(3)

முன்னாளில் வாணிகத்தில் முதன்மைபெறு யவனர்களும் தென்னாட்டில் உவரியெனும் துறைமுகத்தில் திரண்டுவந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/75&oldid=1580032" இலிருந்து மீள்விக்கப்பட்டது