பக்கம்:மறைமலையம் 12.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

❖ LDM MLDMOED -12

குலத்தினேம். இங்ஙனம் இங்ஙனம் இருவேறு வகைப்பட்ட குலத் தினரும் ஒருங்கு கலக்க இருதிறத்தாரும் இசைவரோ என்பதனைக் கருதிப் பார்த்தல் வேண்டும்.

நயினார் : அஃதெல்லாம் இருக்கட்டும். சாதி, குலம், சமயம், செல்வம், தலைமை, தாழ்மை முதலான எதுவுங் காதலன்பினைத் தடை செய்ய வல்லதன்று. நீ என்னை நின் நீ உயிராகவும் யான் உன்னை என் உயிராகவும் நினைப்பது உண்மையானால், நீ நின் தங்கைபால் மிக்க அன்பு பூண்டு நடந்து அவளுயிரைக் காப்பது உண்மையானால், அவனை நீ எனக்கு மணஞ் செய்து கொடுத்தல் வேண்டும். உன் தந்தையை இதற்கு இணக்க வேண்டுவது உன் கடமை; என் தந்தையை இணக்க வேண்டுவது என் கடமை. நின் தங்கையும் நீயும் மடிய உன் தந்தையார் பார்ப்பரா? யான் மடிய என் தந்தை பார்ப்பரா? அம்பிகாபதி: நான் மடிவதாயிருந்தாலும் அவர்கள்

ணங்காவிட்டால் என் செய்வது?

நயினார் : நான் உயிர் மடிவதே செயற்பாலது.

அம்பிகாபதி : நல்லது பார்ப்போம் என் தங்கை உனக் கெழுதிய சீட்டுக்கு ஒரு விடை எழுதித்தா. யானே அதனை அவள்பாற் சேர்ப்பிக்கின்றேன்.

நயினார்:(பாட்டினாலேயே விடை எழுதுகின்றான்)

கொவ்வைக் கனியைக் குறைத்த

இதழுங் குயில்போற் பயில்மொழியும்

நவ்வி யனைய மதர்விழியும்

நறவு வார மணங்கமழும்

மௌவற் கொடிபோற் றுவள்வடிவும்

வாய்ந்த நங்காய் இருபளிங்குங்

கௌவி யிடைசேர் மலர்நிறம்போல்

இருவேமுளமுங் கழுமுமால்

இருவேம் உடம்பில் ஒருளமே

இசைந்தார்ந் திருக்க என்னுளத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/119&oldid=1580721" இலிருந்து மீள்விக்கப்பட்டது