பக்கம்:மறைமலையம் 12.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மூன்றாம் நிகழ்ச்சி : ஏழாங் காட்சி

களம் : அமராவதியின் கன்னிமாடம்.

நேரம் : உவாநாளின் பிற்பகல்

அமராவதி : அருமைத்தோழீ நீலம்! நேற்றுக் காலையில் நாம் நம்பெற்றோர்களுடனும் அமைச்சர் நம்பிப்பிள்ளை யுடனுஞ் சிவபிரான் திருக்கோயிலுக்குச் சென்று சிவபிரானை யும் பிராட்டியையும் வணங்கியபின், என் தந்தையார் என்னை இறைவன் முன்னிலையிற் பாடி ஆடச் சொன்னார். அங்ஙனமே யான் பாடி ஆடுகையில் ஓர் அழகிய இளைஞர் அங்கேவர, என் தந்தையாரும் அமைச்சரும் அவரை அன் புடன் வரவேற்று அமர்வித்து என் ஆடல்பாடல்களை அவர் கண்டு கேட்கும்படிச் செய்தனரே.

தோழி : ஆம் அம்மா, அதைப் பற்றி நமக்கென்ன?

அமராவதி : அங்ஙனஞ் சொல்லாதே நீலம்! சில நாட்களுக்கு முன் என்னை இங்ஙனமே என் பெற்றோர்கள் கோயிலில் ஆடிப்பாடச் செய்ததும், அப்போது என் மாமன் குலசேகரனை அவர்கள் அங்கே வருவித்திருந்ததும் நீதான் அறிவாயே.

தோழி : ஆம், அறிவேன் தான். அதைப்பற்றித்தான் நமக்கென்ன?

6

அமராவதி : பின் நடந்ததை நீ அறியாய். கோயிலில் என்னைப் பாத்ததற்குப் பின் என் மாமன் கன்னிமாடத்தில் என்னை வந்து கண்டான். கண்டு உரையாடுகையில், தான் என்னை மணந்து கொள்ளக் கருதியதைத் தெரிவித்தான். யானோ மணஞ்செய்து கொள்ளக் கருதாமையினை அவனுக்கு அறிவித்தேன். அதனால் அவன் என்மேற் சீற்றங்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/121&oldid=1580723" இலிருந்து மீள்விக்கப்பட்டது