பக்கம்:மறைமலையம் 12.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

தோழி : ஆம், கண்டேன்.

111

அமராவதி : (பேராவலோடெழுந்து அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு) என் ஆருயிரணங்கே! என் காதலரை எப்போது யான் தனியே காண்பேன்?

தோழி : இப்போது இன்னுஞ் சிறிது நேரத்திற்

காண்பாய்.

அமராவதி : (மருண்டு) என்னடி நீலம்! என்னைப் பகடி பண்ணுகின்றனையா?

தோழி : இல்லை அம்மா! இன்னும் சிறிது நேரத்தில் நீ அவரைக் காண்பாய்; ஈது உண்மை.

அமராவதி : (திகைத்து) உண்மையா? எவ்விடத்தில் அவரைக் காண்போம்? நாம் இருக்கும் இவ்விளமரக்காவும், தனுள்ளிருக்கும் மண்டபங்கள் மாளிகைகளெல்லாமும் வானளாவும் மதிலாற் சூழப்பட்டு மதிற்புறத்துங் கடுங் காவலர்களை உடையனவல்லவோ? இவ்விடங்களில் நீயும் நானுந்தவிர நம் தோழிமார்கூட நம் உடன்பாடின்றி வரல் முடியாதே! நம் பெற்றோருந் தமையனுங்கூட இங்கு வருவ தில்லையே!

தோழி : : அதனாலேதான் அவர் இங்கே வருவதற்கு வேண்டிய ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

அமராவதி: நல்லது! அவ்வொழுங்குதான் யாது? சிறிதாயினுஞ் சொல்லி என் மனக்கலக்கத்தை அகற்றே

தோழி : நாம் தனியே நீராடும் செங்கழுநீர் ஓடைக்கு வா. அதன் கரையிலுள்ள நமது ஒப்பனை மாளிகையில் அவரை வரவேற்றல் வேண்டும். அம்மாளிகையின் அருகிலுள்ள வேப்பமரம் தன் பக்கத்துள்ள மதிலினும் உயர்ந்து மதிற் புறத்தும் நிழல் பரப்பி நிற்கின்றது. மதிற் புறத்தேபடும் அதன் நிழலில் ஒரு காளிகோயிலிருக்கின்றது. அக்காளி கோயி லிருக்கும் இடம் ஊர்க்கு வெளியே தனிமையிலுள்ளது. அதன்கண் உள்ள காளியம்மை மிகக் கொடுமையானவள் என்னும் எண்ணத்தாற் குடிமக்கள் மாலை ஐந்து நாழிகைக்கு மேல் அப்பக்கத்தில் இயங்குவதில்லை. இந்நள்ளிரவில் நின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/144&oldid=1580746" இலிருந்து மீள்விக்கப்பட்டது