பக்கம்:மறைமலையம் 12.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

உறவான பேரன்பை எழுமையிலும் உள்ளியுள்ளி மறவாத செயலன்றி மற்றேது செய்கேனே!

பிழைக்கு வழி காணாமற் பெரிதே வருந்தும்

மாந்தர்க்குப் பெரிது காக்கும்

மழைக்குமொரு கைமாறு மதிப்பா ருளர்கொல்!

மாதேபார்! மற்றுமிங்கே

உழைக்குமுயிர் எல்லாமும் இரவும் பகலும் ஓவாதே ஓங்கி வாழ்ந்து

தழைக்கவொளிர் வெய்யோற்குந் தவழ்வெண் மதிக்கும் என்செய்வர் சாற்று வாயே!

113

தோழி : கண்மணி அமராவதி! எனக்கென்ன கைம்மாறு வேண்டும்? நீயும் நின் காதலரும் ஒன்றுகூடி இனிது வாழ் வதைக் காண்பதே எனக்குக் கைம்மாறு. நின்னை அவர் பெறுதற்கும் அவரை நீ பெறுதற்கும் முற்பிறப்பில் நீங்கள் செய்த தவமே உங்களைக் கூட்டுகின்றது. (ஓர் ஓசை கேட்டு) அவ்வோசையைக் கேட்டனையா? அவர் வந்துவிட்டார். அவர் எறிந்த பூம்பந்து விழுந்த ஓசை தான் அது. யான் நூலேணி கொண்டு போய் அவரை அழைத்து வருகிறேன். நீ மாளிகையுள் இரு.

அமராவதி : யான் அணிந்திருக்கும் ஆடையணிகலங் களைல்லாம் அவர் பார்த்து மகிழத்தக்க வகையாய்த் திருத்தமாய் அமைந்திருக்கின்றனவா?

தோழி : நின் பேரழகினுக்கு முன் அவ்வாடை அணி கலங்கள் எம்மட்டு? நின் அழகினாலேயே அவை அழகு பெறுகின்றன! நின் காதலர் தம்முடைய கண்களாற் பெறு தற்குரிய அரும்பெரும் காட்சியை ப்போது காண்பர். (நூலேணியுடன் போய் விடுகிறாள்)

அமராவதி : (தனக்குள்) ஓ! நெஞ்சமே உனக்கு ஆசிரியரா யிருந்தவர் இப்போதுனக்குக் காதலருமாயினர். அவருடன் எங்ஙனம் உரையாடுவதென்று தயங்காதே! தடுமாறாதே! நீ விழைந்த அரும்பொருள் நினக்கு எளிதில் கிட்டும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுதற்கேற்ற வழியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/146&oldid=1580748" இலிருந்து மீள்விக்கப்பட்டது