பக்கம்:மறைமலையம் 12.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

நான்காம் நிகழ்ச்சி : ஆறாம்காட்சி

களம் : சோழன் மாளிகை.

காலம்: பிற்பகல்

அரசன் : வரவேண்டும், வரவேண்டும், புலவர் பெருமான் வணக்கம். இருக்கையில் - அமருங்கள்.

ஒட்டக்கூத்தர் : வேந்தே நீடு வாழ்க! என்னை

வித்தது எதன் பொருட்டோ?

வரு

அரசன் : சிவபெருமான் வழிபாட்டுக்கென்று வைக்கப் பட்டுள்ள நமது பூந்தோட்டத்தின் சிறந்த நறுமலர்கள் சிறிது காலமாகக் களவு போயின. கள்வனைப் பிடித்துக் கொணர்க வென்று தோட்டக்காரனுக்குக் கட்டளை பிறப்பித்திருந் தேன். சென்ற கிழமை காலையில் அவனும் நகர் காவலனுஞ் சேர்ந்து கம்பர் மகன் அம்பிகாபதியைக் பிடித்துக் கொணர்ந் தனர். எனக்கது வியப்புந்திகைப்பு மாயிருந்தது. உடனே யான் அமைச்சரை வருவிக்க, அவர் தோட்டக்காரனும் அவன் மனைவியுங் கூறியவைகளை நன்காராய்ந்து பார்த்து, ஏதோ ஆள் மாறாட்டம். அம்பிகாபதி குற்றவாளி யல்லன் என்றனர். இதைப் பற்றித் தங்கள் கருத்தை அறியவே தங்களை இங்கு வருவித்தேன்.

ள்

கூத்தர்: அம்பிகாபதியைக் கொண்ர்ந்தது ஆள் மாறாட்டமாயிருக்கலாம். ஆனால் ஒன்று; திருடனாயிருப் பவன் பொன்னும் மணியும் பூணும் பட்டாடையுமன்றோ திருடுவான்; பூக்களைத் திருடுவதால் அவன் எய்தும் பயன் என்னை? மேலும், நறுமணங் கமழுங் விழுமிய பூக்களைக் களவு செய்பவன் கள்வனாயிருத்தல் இயல்பன்று. தான் விழைந்த ஒரு மாதுக்குச் சூட்டும்பொருட்டே எவனோ ஒரு காமுகன் ரு அவைகளைப் பறித்துச் சென்றானாகல் வேண்டும் தோட்டக் காரனும் அவன்றன் மனைவியுங் கூறியவற்றிலிருந்து நுங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/173&oldid=1580775" இலிருந்து மீள்விக்கப்பட்டது