பக்கம்:மறைமலையம் 12.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

155

றைவனை இறைஞ்சுகின்றோம். நீங்கள் இப்போது அமைதியாயிருங்கள். நீங்கள் மனங் கலங்கினால் தங்கை தங்கம் எங்ஙனம் ஆற்றும்? அம்பிகாபதியாரும் யானும் ஒன்றாயுந் தனித்தனியாயும் உங்களை அடுத்தடுத்து வந்து காண்போம்.

(இருவரும் அவ்விருவர்பாலும் விடைபெற்று மீள்கின்றனர்; மீண்டு செல்லும் வழியில்)

அம்பிகாபதி : நயினார் நீ சொல்லிய அளவுக்குமேல் தங்கம் எவ்வளவு அழகா யிருக்கின்றனள்! ஆனாலும்.

யினார் : (தடுத்து) (தடுத்து ) இங்கே ஒன்றும் வாயைத் திறவாதே! நாம் தெருவில் செல்கின்றோம் என்பதை மறந் தனையா? மேலும், இது முன்னிருட்டுக் காலம்; பக்கத்தே சல்பவர் இன்னாரென்பது தெரியவில்லை; வழிக்கரை மரங்களில் நெடுகத் தொங்கவிட்டிருக்கும் அகல் வெளிச்சம் அருகே செல்வாரையுஞ் செவ்வனே தெரிந்து கொள்ளப் போதியதாயில்லை. இதோ! அண்மையிற் ‘பெரியநாயகி யம்மை கோவில்' இருக்கிறது; அங்கே சென்று அம்மை யப்பரை வணங்கியபின் எல்லாங் கலந்து பேசுவோம்.

அம்பிகாபதி : நல்லதங்ஙனமே!

ஒரு

ருவரும் கோயிலிற் சென்று வணங்கியபின் தனியேயமர்ந்து மெல்லிய குரலில்

மண்டபத்தில் உரையாடுகின்றனர்)

நயினார் : அம்பிகாபதி, இப்போதுன்மனம் எந்த நிலையி லிருக்கின்றது?

அம்பிகாபதி : என் அமராவதியின் அழகுநலங் குண நலங்களையும் தங்கத்தின் அழகுநலங் குணநலங்களையும் என் மன ஒப்பிட்டு ஆராய்ந்த வண்ணமாயிருக்கின்றது ஆ, ஆண்டவன் படைத்த பெண்மை அழகில் எத்தனை வகை! ஒவ்வொன்றும் வியக்கத் தக்கவாறாய் அமைந்திருக் கின்றதேயன்றி, மிக அழகிய மாதரில் எவர் அழகில் மிக்கார்? எவர் அதிற் சிறிது குறைந்தார்? என்று வரையறுத்துக் காண்டல் ஒரு சிறிதுமியலவில்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/188&oldid=1580793" இலிருந்து மீள்விக்கப்பட்டது