பக்கம்:மறைமலையம் 12.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

தங்கத்தின் நகையனைய தகைமையதோ அவள்வடிவந் தளிர்மென் கொம்போ!

ஏதென்று துணிந்துரைப்பென் ஏந்திழையா ளிருகொங்கை யிருசெப் பேய்க்கும் மாதென்றுங் கரவறியா வருந்துளத்தின் மறுகுதலால் மதர்த்த லின்றிச்

சூதென்றுந் தொடலரிய சுடர்க்கொடியாய்ச்

சுழல்வளது சுடுமென் னெஞ்சை

யாதென்று விளம்பிடுவென் எனக்கவள்பால்

எழுநேயம் இரக்கத் தாமால்

நயினார் :

157

இனி, என் காவேரியைப்பற்றி யாது

சொல்லப் போகின்றாய்?

அம்பிகாபதி :

எனக்குப்பின் பிறந்தாளை என்னிருகண் ணனையாளை இளமான் கன்று தனக்குத்தான் நிகர்வாளைச் சடைப்பாசி

யென அடர்ந்து தழைந்து மைபோல் வனக்கரிய குழலாளை அதனருகே

வளர்பானல் மலர்க்கண் ணாளை நினக்கியா னெடுத்துரைத்தல் மிகையன்றோ நேயமிகு நெஞ்சிற் செம்மால்!

மெழுகினால் எழில்கனிய வனைந்திட்டு

விளங்குமொரு பாவை மேனின்

றொழுகுசெழு முகத்துடனே உயர்தெங்கின்

இளங்காய்கள் உறழ்ந்து தோன்ற

முழுநெறியாஞ் செவ்வாம்பல் வாய்திறந்து

மொழிநறவு வழியப் பேசிப்

பழுதிலுயிர் கொண்டுலவும் பான்மையளென்

றங்கையெனப் பகர்வென் பாராய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/190&oldid=1580810" இலிருந்து மீள்விக்கப்பட்டது