பக்கம்:மறைமலையம் 12.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மறைமலையம் -12

நயனிார் : ஆ! அம்மூவர் உருவினையும் வரம்புகட்டிப் பாடிய நின் பாடல்களால் அம் மூவரையும் யான் என் கண்ணெதிரே காண்பதுபோல் உணர்கின்றேன், ஆனாலும், நீ அம்மூவரில் எவர் மற்றை இருவரிலும் அழகின் மிக்கார் என்பதை எடுத்துக் கூறிற்றிலை; அதனையும் அம்புகூர்ந்து சொல்!

அம்பிகாபதி:

நங்கையர் மூவரிற் பொற்பிற் சிறந்த நலமுடையார் இங்கெவ ரென்று மிகுத்துரை கூறல் இயல்வதில்லை; அங்கஃ தாயினும் என்னமராவதி ஆரணங்கின்

கொங்கை முகிழென்றன் நெஞ்சத் தடத்திற் குடிகொண்டதே.

நயினார் நல்லது! அமராவதியின் அழகின் மேன்மையைப்பற்றி நீயும் பிறருங் கூறக் கேட்டதேயன்றி, அதனை யான் கண்டறிந்திலேன். அதனை நேரே கண்டு அதன் இனிமையையும் நுகர்ந்த நினக்குத்தான் அதன் உண்மை நன்கு விளங்கும். அது நிற்க. தங்கத்தின் வடிவழகைப் பற்றி நீ கூறியதை நோக்கினால், அவளது வனப்பு நினதுளத்தைக் கவராம லிருக்கவில்லை யெனக் கருதுகின்றேன்.

ரு

அம்பிகாபதி : உண்மைதான்; தங்கத்தின் உருவழகு எந்த வகையில் எனதுளத்தைக் கவர்ந்ததென்பதனைச் சிறிது பகர்கின்றேன். ஓவியம் வரைதலையே தொழிலாய்க் கொண்டிருப்பான் ஒருவன், வனப்பின்மிக்க ஒரு மாதின் வடிவைக் காணின் அதனைப் பிறழாமல் வரைதலிலேயே கருத்துக் கொண்டிருப்பானன்றி, அம் மாதின் மேற் காதல் கொண்டு விடுவான் அல்லன்; அதுபோல, யானுந் தங்கத்தின் உருவமைப்பை நோக்கி வியக்கின்றேனேயன்றி, அவள் மேற் சிறிதுங் காதல் கொண்டிலேன்.

நயினார் : எழிலிற் சிறந்த ஒரு நங்கையைக் காண்பவன், அவள்பாற் காதல் கொள்ளாதிருத்தல் இயலு யலுமோ?

அம்பிகாபதி : இயலும்; வனப்பின்மிக்க மங்கைய ரெல்லாரும் ஆடவர்க்குக் காதலை மூட்ட மாட்டுவார் அல்லர். காதலை மூட்டுவது வனப்பு மட்டும் அன்று; மங்கையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/191&oldid=1580818" இலிருந்து மீள்விக்கப்பட்டது