பக்கம்:மறைமலையம் 12.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

அரசன் : ஆசிரியர்க்கு வணக்கம்! அமருங்கள்!

161

கூத்தர் : குழந்தாய்! நீ நீடூழி வாழ்க! (இருக்கையில் அமர்கின்றார்)

அரசன் : புலவர் பெருமானுக்கு மீண்டுந் தொல்லை கொடுத்துவிட்டேன். தங்களை வருவித்தது அம்பிகாபதி மேல் எனக்குண்டான ஐயத்தைத் தீர்த்துக்ககொள்ளுதற்கே. நமது அரண்மனைப் பூந்தோட்டத்தில் நறுமணங் கமழும் பூக்களைக் களவு செய்தவன் கம்பர் மகன் அம்பிகாபதியே என்று நம் தோட்டக்காரன் அவனை கொணர்ந்து என் முன்னே நிறுத்தினன். அவன் கள்வன் அல்லன் என்று நம் அமைச்சர் ஆராய்ந்து கூற, அவனை விடுதலை செய்தேன், அதற்குப் பின் தோட்டத்திலிருந்து பூக்கள் களவு போகக் காணோம். மேலுந் தங்கட்கு முன்னொரு கால் அக்களவைப் பற்றிச் சொல்லிய போது, பூக்களைத் திருடுவோன் கள்வனாயிருத்தலாகாது, அவன் ஒரு காமுக னாயிருத்தல் வேண்டுமென்றும் அவன் என் புதல்வி அமராவதியின் கன்னிமாடப் பூங்கா மதிற்பக்கத்தே மறைந்து சென்று சிறிது நேரங் கழித்து வெளிப்பட்டுப் போந்ததில் ஒரு நுணுக்கம் இருக்கின்றதென்றுந் தாங்கள் கூறியது தங்கள் நினைவிலிருக்கலாம்.

கூத்தர் : ஆம், ஆம். அம்பிகாபதி, அமராவதிக்குத் தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்ததில், அவ்விருவரும் ஒருவரை யொருவர் பாராதபடி நடுவே திரையிட்டுத், தோழிமாரையுங் காவலாக இருக்கச் செய்தனையே; அவ்வேற்பாட்டின் படி அவர் ஒருவரையொருவர் பாராமலே பாடம் நீள நடை பெற்று வந்ததா?

6

அரசர் : ஆம், அதனைக்கண்டறிதற் பொருட்டே பெரிய நாயகியம்மை கோயிலில் ஒருநாட் புதல்வி அமராவதியை ஆடிப் பாடச் செய்தோம். அப்போது அம்பிகாபதியையும் வருவித் திருந்தோம். ஆயினும், ஆடிப்பாடியவள் எம் புதல்வி அமராவதியே என்பதும், அப்போதங்கு வந்திருந்தவன் அவளுக்குத் தமிழ் கற்பிக்கும் அம்பிகாபதியே யென்பதும் அவ்விருவரும் அறியாமற் செய்திருந்தோம். அங்ஙனஞ் சய்ததில் அவள் அவனையும், அவன் அவளையும் அதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/194&oldid=1580843" இலிருந்து மீள்விக்கப்பட்டது