பக்கம்:மறைமலையம் 12.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

165

இவ்வாறு தனக்குட் பேசிக் கொண்டே புகழேந்திப் புலவர் மாளிகையுள் நுழைகின்றான்)

தங்கம் : (எதிரே போந்து வணங்கி) அத்தான்! வாருங் கள். வாருங்கள். அம்மை உங்களை எதிர்பார்த்துக் கொண் டிருக்கின்றார்கள்.

அம்பிகாபதி : இன்றைக்குள்ள உனது முகமலர்ச்சியைக் காண்கையில், தங்கம், நின் அன்னையார்க்கு உடம்பு நலம் பெற்று வருகிறதென்று கருதுகிறேன்.

தங்கம் : ஆம், அத்தான், நீங்கள் வந்து பார்க்கத் தொடங்கிய நாளிலிருந்து அன்னையார்க்கு உடம்பு செம்மை யாகி வருகின்றது.

அம்பிகாபதி : அது மகிழத்தக்கதேயாயினும், நீ சில நாட்களாக அகமும் முகமும் மலரப் பெற்றிருத்தலே நின் அன்னையாரின் உடம்பு நலம் பெற்றிருந்ததற்கு உண்மைக் காரணமாகும்; எனது வருகையும் அதற்கு அடுத்தபடியில் ஒரு காரணமாயிருக்கலாம். அஃதிருக்கட்டும். நினது மகிழ்ச்சிக்குக் காரணமாவதை எனக்குத் தெரிவிப்பதில் தடை ஏதும் இல்லையாயின், அதனைத் தெரிவிக்கக் கோருகிறேன்.

சிறு

தங்கம் : தடை ஏதுமில்லை; அதனைப் பின்னர்த் தெரிவிக்கிறேன். இப்போது அம்மையிடம் வாருங்கள்!

இருவரும் அரங்கம்மாளிடம் போக)

அம்பிகாபதி : அத்தையார்க்கு வணக்கம். உங்களுடம்பு நலம்பெற்று வருதலறிந்து களிக்கின்றேன். சிவபிரான் உங் கட்கு முழுநலமும் அருள்க!

அரங்கம்மாள் : குழந்தாய் அம்பிகாபதி, நினது வருகை யுந் தங்கத்தின் மகிழ்ச்சியுமே என்னைப் பிடித்த வெம் பிணியை நீக்கி வருகின்றன. என் புதல்வி தங்கம் என்றும் மகிழ்ந்திருக்கக் காண்பேனேல், என்னை வருத்தும் பிணி அறவே நீங்கிவிடும். அஃதிருக்கட்டும். தாமரை மலர் போன்ற நின்முகம் ஏன் வாடியிருக்கின்றது? சிற்றுண்டி சிறிதருந்தி நமது பூங்காவிற் சிறிது நேரமாவது அமர்ந்திருப்பையானால் இவ் வாட்டம் அகலும். (தங்கத்தை நோக்கி) குழந்தே! நின் அத்ததனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/198&oldid=1580877" இலிருந்து மீள்விக்கப்பட்டது