பக்கம்:மறைமலையம் 12.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மறைமலையம் 12

கிறான்! நம்ம ராசா மகன்கூட அவனழகுக்கு ஈடாயில்லெ. நம்ம இளய ராசாத்தி அழகுதான் அம்பிகாபதி அழகுக்கு ஈடா இருக்கு. அவங்கரெண்டு பேரும் ஒருத்தர் மேலெ ஒருத்தர் உயிர்நேசமா மறவிலெ கூடிக்குலாவுறாங்களாம். இதே அரமனெ வேலைக்காரர் குசுகுசு பேசிக்

கொள்ளுறாங்க.

வன்

கருப்பண்ணன் : அடி அதெப்பற்றி நாம மறவாக்கூடப் பேசப்படாது. “பகலிலே பக்கம் பார்த்துப் பேசு, இராவிலே அதுதானும் பேசாதே" என்னு பழமொழி பெரியவங்க சொல்லுறாங்களே.

வெள்ளைச்சி : அது சரிதாங்கிறேன். அவ்வளவு படிச்ச வனா அழகனா இருக்கும் அம்பிகாபதிக்கி நம்ம ராசா மகளெக் குடுத்தாலென்னா?

கருப்பண்ணன் : அப்பாடா! நம்ம மன்னன் ஒசந்த வெள்ளாள குலம், அம்பிகாபதியோ தாழ்ந்த ஓச்ச குலம். மேலும், நம்ம மன்னன் ஊரையாளும் முடியரசன், அம்பிகாபதியோ நம் மன்னனெ அண்டிப் பிழைப்பவன். நம்ம மன்னன் ரொம்பப் பொல்லாதவர். தன் குலத்திற்காகத் தன் உயிரையும் விட்டுடுவார். அப்பிடிப்பட்டவர் தன் ஒரே மகளெ அவனுக்குக் குடுத்துடுவாரா!

.

வெள்ளைச்சி : என்னங்கிறேன். நீயோ தாழ்ந்த வேட்டக் காரன், நானோ ஒசந்த எடச்சி; நீ என் மேலும் நான் உன்மேலும் ரொம்ப அவாப்பட்டதெப் பார்த்து என்னெப் பெத்தவங்க என்னெ உனக்குக் குடுக்கலெயா?

கண்ணன் பிறந்த குலத்திற் பிறந்த

பெண்ணை யுனக்குப் பெண்டாக் கொடுத்த பெருமையைப் போல நம்பெருங் கொற்றவன் அருமை மகளை அவனுக் களித்தால் அதிலென்ன குற்றம் அறைந்திடு மச்சான்.

கருப்பண்ணன் :

வள்ளி பிறந்தது எங்கள் குலம் அந்தக் கள்ள முருகன் அவளைக் கவர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/215&oldid=1581019" இலிருந்து மீள்விக்கப்பட்டது