பக்கம்:மறைமலையம் 12.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

நிறுத்தியிருக்குங்

❖ LDM MLDMOED -12 →

அரசி : அமைச்சர் தலைவ, இரக்கமும் அறிவும் வாய்ந்த நீங்கள் முனைந்தால் எதுதான் ஆகாது? ஆனாலும், நம் அரசர் கட்டுக்காவலைக் கடந்து இவர் களை வெளிநாடு கடத்துவது எங்ஙனம் என்றுதான் என் நெஞ்சந் திகிலடைகிறது.

அமைச்சர் : ஆம்! அரசியார் அஞ்சுகிறபடியே என் நெஞ்சமும் அஞ்சுகின்றது. ஆனாலும் காதலர் உயிரைக் காப்பதற்கு இறைவன் துணை கிடைக்கும். புலவர் பெருந் தகை புகழேந்தியாரின் புதல்வி தங்கத்தைக் கொண்டே இவ்வினையை மிகவும் கருத்தாய் முடிக்க வேண்டும். தங்கத்தைத் தவிர வேறெவரும் இங்கே வருதல் இயலா தன்றோ? கம்பராவது அவரைச் சேர்ந்த வேறெவராவது னி இங்கு வரப்பெறார். எல்லாஞ் சூழ்ந்து முடிவு செய்து காண்டு இரண்டொரு நாளில் தங்கத்தைத் தங்களிடம் வரச் ம் செய்கிறேன்.

அரசி : அமைச்சர் பெருந்தகை! அங்ஙனமே செய்க. (அமைச்சர் போய்விடுகிறார்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/231&oldid=1581154" இலிருந்து மீள்விக்கப்பட்டது