பக்கம்:மறைமலையம் 12.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

201

வருத்தம் அளவிடற்பாலதன்று! கம்பர் நின் தந்தையார்க்கு நெஞ்சங்கலந்த நண்பராதலால், ஒட்டக்கூத்தர் தமது இயற்கைப் பொறாமைக் குணத்தை விடாராய்க் கம்பரையும் அவர் தம் அருமைப் புதல்வனையும் அதுபற்றி மிக வெறுக்கின்றார். ஆகையாற் கூத்தர் யாது முடிபு கூறுவாரென்று ஐயுற்று நாம் அதனை எதிர்பார்க்க வேண்டுவதில்லை!

தங்கம் : அதனாற்றான் நாம் செய்ய வேண்டியதை உ னே செய்து முடிக்கவேண்டுமென்று அண்ணன் நயினார் பிள்ளை என்னைத் தங்கள்பால் விடுத்தனர்.

அரசி : கண்மணி தங்கம், இப்போது நாம் யாது செய்தல் வேண்டும்?

தங்கம் : அம்மா, தங்கை அமராவதி தனது இளமரக்கா வில் நீராடும் ஓடைக்கருகில் மதிற்புறத்தே தனித்திருக்குங் காளிகோட்டத்திற்குத் தன் தமையனார் உடையை அணிந்து கொண்டு இம் மயங்கன் மாலையிலேயே வந்துவிடல் வேண்டும் யானும் அப்போது சிறிது முன்னேயே அங்கே போயிருந்து தங்கையை அழைத்துக்கொண்டு என்னில்லஞ் செல்வேன்.

அரசி : அதன் பிறகு யாது செய்தல் வேண்டும்?

தங்கம் : அம்மா, இதோ இத்தூக்க மருந்தை ஏலக்காய் டுக் காய்ச்சின ஆவின் பாலிற் கரைத்துக் கற்கண்டுங் கலந்து, நம்மன்னர் அதனை இன்றிரவு உறங்கப் போகுங்காற் பருகும்படி கொடுங்கள்!

அரசி : ஆ! என்ன சொன்னாய் தங்கம்? இதனை என் னாருயிர்க் கணவற்கா?

தங்கம் : தாயே அஞ்சாதீர்கள்! நம்மன்னருயிர்க்கு ஏதுந் தீங்கில்லை. தங்கள் மகளும் மருமகரும் உயிர் பிழைக்க வேண்டித், தங்கள் கணவனாரை இன்றிரவு அயர்ந்துறங்கச் செய்ய வேண்டுவது இன்றியமையாத தாயிருக்கின்றது! அவ்வளவு தான்!

அரசி : அங்ஙனமாயின், அதனை என் கையிற்கொடு, நீ சான்னவாறே செய்வேன். என் கணவனாற்கு ஏதுந் தீங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/234&oldid=1581167" இலிருந்து மீள்விக்கப்பட்டது