பக்கம்:மறைமலையம் 12.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

❖ LDMMLDMOLD-12 →

கூத்தர் : அரசே, பார்த்தனையா? புகழேந்தியின் மனையிற் கம்பரும் அவர் மக்களும் நின் அருமைப் புதல்வியும் ஒன்று சேர்ந்து நேற்றிரவே வெளிநாடு சென்றுவிட்ட செய்தி வெளியாகி விட்டது.புகழேந்தியின் மகள் தங்கம் ஒருத்தி தானே இங்கே அரண்மனைக்குள் வந்து போய்க் கொண்டிருந்தவள். அவர்களைச் சகடம் ஏற்றி வெளிநாடு கடத்தியவன் அமைச்சர் மகன் நயினார் பிள்ளையேயென்பதும் இப்போது வெளியாய் விட்டது!

சோழன் : (மிக்க சீற்றங்கொண்டு) ஆம்! ஆம்! தங்கமும் நயினானுஞ் செய்த சூழ்ச்சியிலேயே அவர்களெல்லாரும் நம்மைத் தப்பிப் போய்விட்டார்கள்! இவர்களிருவரையுஞ் சிறையில் அடைப்பித்து விடுகின்றேன். அம்பிகாபதியையும் அந்த வேசியையும் பிடித்துக் கொணர்ந்து நீற்றறையிலிட்டு நீறாக்கக் கூடாவிட்டால், கூடாவிட்டால், இவர்களிருவரையும் நீறாக்கி

விடுகின்றேன்!

கூத்தர் : அப்பனே! பதறாதே! தங்கந் திருமணமாகாத இளம் பெண்; அவள் தந்தையோ என்னால் துன்புறுத்தப் பட்டு இறந்தார் என்னும் பழிச்சோல் எங்கும் பரவியிருக் கின்றது! இப்போதவர் மகளையும் நீ மாய்த்து விட்டால், நீ என் சொற்கேட்டே அங்ஙனஞ் செய்தாய் என்று எல்லாரும் என்னைத் தூற்றுவர்! மேலும், அவளன்னையோ நோயாற் படுக்கையிலேயே கிடக்கின்றாள்! இனி, நயினானோ நம் அமைச்சர்க்கு ஒரே மகன், அவனை நீ கொலை செய்வித்தால், அறிவிலுஞ் சூழ்ச்சியிலுந் தமக்கு நிகராவார் எவருமில்லா நம்பிப்பிள்ளை நமதரசையே பாழாக்கிவிடுவார்!

சோழன் : (மனங்கசந்து) அவ்வாறானால், எனக்கு நேர்ந்த மானக் குறைச்சலுக்கு ஏதொரு தீர்வும் இல்லையா?

அவன்

கூத்தர்: சிறிது பொறு! அம்பிகாபதிதானே உனக்குத் தீது சய்தவன்? நீ நம்பிச் சய்த செய்கையில் தகாதொழுகியதனால், அவனை நீ ஒறுத்தல் முறையேதான். அதற்கொரு வழி செய்யலாம்.

சோழன் : அஃதென்ன பெருமானே? அவனுயிரைப் போக்கினாலன்றி எனதுயிர் இங்கு நிலையாது! என் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/245&oldid=1581178" இலிருந்து மீள்விக்கப்பட்டது