பக்கம்:மறைமலையம் 12.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231

களம்

ஐந்தாம் நிகழ்ச்சி : பத்தாங் காட்சி

பிரதாபருத்ரனது வேனில் மண்டபம்

காலம் : குறைநிலாக் காலத்தொரு நாள் மாலை

6

அம்பிகாபதி : கண்மணி அமராவதி! வானகத்து வயங்கும் இப்பாதிமதியினைப் பார்த்தனையா? அஃதுன் ஒளி விளங்கு நளிர் நுதலையே ஒத்துளதுகாண்.

அமராவதி : இல்லை பெருமான், அஃதென் கழுத்தை வெட்டுவதற்குக் கூற்றுவன் ஏந்திய கூர்ங்கத்தியாகவன்றோ தோன்றுகின்றது!

நீ

அம்பிகாபதி : (கலங்கி) என் ஆருயிர்ச் செல்வி! சில நாட்களாக நீ ஏன் இங்ஙனம் உளங்கசந்தே பேசுகின்றனை? நமக்கேதொரு குறையும் இல்லாமல் இம்மன்னர் பெருமான் நம்மைப் பேரின்ப நிலையில் வைத்திருக்கின்றனரன்றோ?

அமராவதி : (கண்ணீர் வடித்து) என் தெய்வமே! சில நாட்களுக்கு முன் யான் உங்களைப் பற்றிக் கண்ட கொடிய கனவு என் உள்ளத்தைப் பிளந்து பேதுறுத்துகின்றது! அஃதென் னால் ஆற்ற முடியவில்லை! அதனை முன்னமே உங்களுக்குத் தெரிவித்தால் நீங்களும் ஆற்றாமைப்படுவீர்களென்று என் உள்ளத்தே அதனை அடக்கிவைத்தேன்.

அம்பிகாபதி : கண்மணி, ஒரு துன்பம் வரும்முன் அதன் வரவினை நாம் எதிர்பார்த்திருந்து மாழ்குவது, வராத அத்துன்பத்தை வருவித்ததாய் முடியுமன்றோ? மேலும், நீ கண்டது கனவுதானே; அக்கனா நிகழ்ச்சி நினது கலவரத் தால் வந்ததென்பதில் ஐயமே யில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/264&oldid=1581197" இலிருந்து மீள்விக்கப்பட்டது