பக்கம்:மறைமலையம் 12.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

❖ LDM MLDM-12 →

(கம்பரும் பிரதாபருத்ரனும் வருகின்றனர், அம்பிகாபதியும் அமராவதியும் அவர்களை வணங்கி நிற்க; வந்த அவர்கள் இருக் கையில் அமர்ந்து அவர்களையும் இருக்கையில்

அமர்த்துகின்றனர்.)

பிரதாபன் : (அம்பிகாபதியைப் பார்த்து) இளம் புலவரேறே! யான் நல்ல செய்திகொண்டு வரலானதற்கு அகங்களிக்கின்றேன். நுங்கள் தந்தையாரும் அங்ஙனமே நல்ல

செய்தி கொணர்ந்திருக்கின்றனர்.

(இருவரும் தாம்

கொணர்ந்த

அம்பிகாபதி கையிற் கொடுக்கின்றனர்.)

ஓலைச்சுருளினை

அம்பிகாபதி : (முதலிற் சோழமன்னன் விடுத்த ஓலைச் சுருளைப் பிரித்துப் பார்க்கின்றான். அப்போதங்கு வந்த அவன் தங்கை காவேரியும் உடனிருந்த அமராவதியும் அவன் முகத்தை உற்றுநோக்குகின்றனர்.) அரசர் பெரும! எம்மன்னர் பிரான் வரைந்திருக்கும் இத்திருமுகத்திற் கண்டபடி அவர் செய்வது உறுதியெனத் தங்கள் திருவுள்ளத்திற் றோன்றினால் தங்கள் கட்டளைப்படி நடக்கக் காத்திருக்கின்றோம்.

பிரதாபன் : தமிழ்ச்செல்வமே, தங்கள் மன்னர் கூற்று உறுதியே யென நம்புகின்றோம். தம் அருமை மகளைக் காணாது அரசியார் பெரிதும் ஆற்றாது புலம்புவரென்பது திண்ணந்தானே. அரசியாரின் ஆற்றாமைக்கிரங்கியாவது நம் நண்பர் தம் புதல்வியாரைத் தங்கட்குத் திருமணஞ் செய்து கொடுப்பரென்றே கருதுகின்றோம். (எல்லாரும் மகிழ்கின்றனர்.)

அம்பிகாபதி : ஓ! இவ் ஓலை என் உள்ளத்தை இரு கூறாய்ப் பிளக்கின்றது. என் பொருட்டு என் ஆருயிர் நண்பர் நயினார் பிள்ளை அரசனாற்சினந்து சிறையிடப்பட்டிருக்கின்றன னென்றும், யான் என் காதலி அமராவதியுடன் திரும்பிவந்தா லன்றி அவன் சிறைவிடப்படானென்றும், உடனே திரும்பி

ருவது எல்லார்க்கும் நன்றாம்படி ஏற்பாடு சய்யப் பட்டிருக்கின்ற தென்றும், ஆகவே நாங்கள் எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/265&oldid=1581198" இலிருந்து மீள்விக்கப்பட்டது