பக்கம்:மறைமலையம் 12.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

“பனிப்பகையுங் திங்களுமே பார்த்தசெய லானால் உனக்கியான் சொல்வதொன்றுண்டோ - கனத்த

பிழைசெய்தான் அன்னைக்குப் பின்பார்க்க வேண்டாம் கழுவினிலே யேற்றிவிடல் காண்!”

245

அரசன் : (அது கேட்டுக் கொலைஞரை விளித்து) ஏ கொலைஞர்காள்! இப்பயல் அம்பிகாபதியை ஈர்த்துக் கொண்டுபோய்ச் கொலைக்களத்தில் வெட்டி வீழ்த்துக!

(இச்சொற்கேட்டு மேன்மாளிகையில் அமராவதி துடித்து உணர்வு மயங்கி விடுகின்றாள்; அரசவையுங் கலைந்துவிடு கின்றது.)

கம்பர் : (உணர்வு கலங்கி ஆற்றாமைமிக்கு) அடே குலோத்துங்கா! கூத்தா! தீது செய்யாத என் அருமை மகனை இரக்கமின்றிக் கொலைசெய்விக்கும் நீவிர் இருவீருங் கூற்று வனுக்கிரையாகி உடனே ஒழியக்கடவீர்கள்! இச்சோழ அரசும் பாழாய் ஒழியக் கடவது,

(இங்ஙனம் வசை கூறிவிட்டு, மண்டபத்தின் புறத்தே செல்ல, எதிரே ரே நயினார் பிள்ளை வருகின்றான்.)

அழுதுகொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/278&oldid=1581211" இலிருந்து மீள்விக்கப்பட்டது