பக்கம்:மறைமலையம் 12.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251

ஐந்தாம் நிகழ்ச்சி : பதினைந்தாங் காட்சி

களம்

காலைக்களத்தில்

காலம் : மசங்கல் மாலை

(அமராவதி கொலைக்களத்தில் அம்பிகாபதி வெட்டுண்டு கிடக்கும் இடத்தை நோக்கி ஓட அவளன்னை அரசி அங்கயற் கண்ணியுந் தோழி நீலமும் அவளைப் பின்றொடர்ந்தோடிப் பிடிக்கின்றனர்.)

அரசி : அம்மா! என் கண்ணே! நீ எங்கே ஓடுகின்றனை? ஓடிப் பயனில்லை! நின் கணவனைக் காண முடியாது!

அமராவதி : ஏன் காணமுடியாது? அவரை வெட்டுங் கொலைஞர் என்னையுஞ் சேர்த்து வெட்டட்டும்! என்னை விடுங்கள்! என்னை விடுங்கள்!

(என்று அவர்களது பிடியைத் திமிரிக்கொண்டோடி நிலத்தே செந்நீர்ப் பெருக்கிற்கிடக்கும் அம்பிகாபதி மேல் விழுந்து புலம்பி அழுகின்றாள்.)

என்ன காலம் வந்த தையா!

என்னுயிர் தன்னில் இசை நீவிர்

தன்னந் தனியே எளியேனைத் தணந்து பெயர்தல் தகுமோ உரையீர்!

மன்னன் நும்மேல் வஞ்சங் கொண்டே மாய்த்தனன் என்னால், எனைநீங்கிப்

பொன்னின் மிளிரும் புகழ்மேனி புழுதி படியப், புரிந்தீர்! பிரிந்தீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/284&oldid=1581217" இலிருந்து மீள்விக்கப்பட்டது