பக்கம்:மறைமலையம் 13.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி *

75

எண்ணியகாரியங்கள் தன் விருப்பப்படி நடந்தேறாமைப் பற்றி நல்லானுடைய அழகிய முகத்தில் ஒருவகையான விசனக்குறிதோன்றியது; இவன் ஏவல்ஆளான இருளனோ தன் எசமானன் எப்போதும் போல இப்போது தன்னைப் பற்றி உயர்வாக நினைக்கவில்லை என்பதனை உணர்ந்தான்போல மனத்தளர்வுங் கலக்கமும் உள்ளவனாய்க் காணப்பட்டான். இவர்கட்குள் இதற்குமுன் எத்தகைய சம்பாஷணை நடந்ததோ, இப்போது இவர்கள் நெடுநேரம் வாய்பேசாது சும்மா இருந்தார்கள்; கடைசியாக நல்லான் தானே வாய்திறந்து பேசுவானாயினான்; இவன் முதலிற்பேசும்போது வெடுவெடுப் பான குறியோடும், பொறுமையில்லாத உடம்பாட்டத்தோடும் பேசினான்.

ருளா! நீயும் உன் கூடவந்ததோர் ஐவரும் பௌத்தர் மூவரால் முழுத்தோல்வி பெற்ற கதையை நீ சொல்லக் கேட்கும்போது யான் விழித்திருக்கின்றேன் என்று என்னையே நான் இப்போதும் நம்பக் கூடவில்லை; ஈதெல்லாம் எனக்கு ஒருகனவுபோற் றோன்றுகின்றது எனத் திரும்பத் திரும்ப யான் சொல்லவேண்டுமா? என்று நல்லான் என்னுங் கொள்ளைக் கூட்டத்தலைவன் கூறினான்.

“எங்கள் துப்பாக்கிகளைக் கையாளவேண்டிய வழியைப் பற்றி நீங்கள் இட்டகட்டளை முதலிலிருந்தே மரணத்திற் கேதுவாயி ற்றென்பதை தங்கட்கு விவரமாய்ச் சொன்னேனே' என்று இருளன் விடைபகர்ந்தான்.

66

அப்படியானால் அந்தத் துப்பாக்கிகளை நீ உபயோகப் படுத்தியிருக்க வேண்டும் உயிராகவோ, உயிராகவோ, பிணமாகவோ நீலலோசனன் என்னும் அரசிளைஞனைக் கொண்டுவரும்படி கேட்டேனே. அவனைச் சிறைப்படுத்தி என் கைவசப்படுத்து வதையே யான் மேலாக எண்ணினேன் என்பதும் உனக்குச் சொன்னேன்; ஏனென்றால், அவன் எனக்கு ஏதொரு தீங்கும் செய்யாமையானும், என் ஆயுசில் அவனை யான் கண்டதில்லா மையானும் நான் பச்சை ரத்தம் ஒழுகக் கொல்லும் கொலை காரன் அல்லனாகலானும், தக்க காரணம் இன்றி ஒருமனிதனு யிரைப் பலியிடுவதில் எனக்கு விருப்பமில்லா மையானும் என்பது. ஆயினும் அப்படிப்பட்ட இடரான நிலையில் முக்கியமாய்த் தன்னைக் காக்க வேண்டி நேர்ந்த சமயத்தில் -என்று கொடுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/104&oldid=1581359" இலிருந்து மீள்விக்கப்பட்டது