பக்கம்:மறைமலையம் 13.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மறைமலையம் 13

நல்லான் அச்சத்திரத்திற்கு வந்ததைப் பற்றிக் குமுதவல்லி எவ்வளவு வருந்தலானாள் என்பதைச் சிறிதும் அறியாதவனாய் அவன் பின்னும் பேசுவானாயினான்: “ஆகையால், பெருமாட்டி! ஓர் அஞ்சலிடம் போகும்வரையில் தாங்கள் தக்க வழித் துணையோடு வருவது நலமாமென்று உங்களுக்குத் தோன்று கிறதன்றோ: அதன்பிறகு உங்களுக்கு இசைவாயிருந்தால் உங்கள் தோழிமார்களோடு நீங்கள் தனியே செல்லலாம். ஏனென்றால், நல்லான் இப்போது ஏதேனும் தங்களுக்குத் தீங்கு இழைக்க எண்ணியிருந்தானானால் இங்கிருந்து சில தூரத்திற்கு அப்பால் அவன் தன் பதிவிடத்திலிருந்து நீங்கள் நல்ல துணையோடு செல்லுவதைப் பார்த்தவுடனே தன் எண்ணத்தை மாற்றி விடுவான்."

தன்

குமுதவல்லியோ தன்னைச்சுட்டி அக்கள்வர் தலைவன் ஏதேனும் முடிவான உத்தேசம் கொண்டிருப்பான் என்று உண்மையிலே ஒன்றும் நினைக்கவில்லை; அவன் நோக்கம் எதுவாய் இருந்தாலும் அம்மோதிரத்தை அவன் வசப்படுத்திக் கொண்ட அப்பொழுதே அது நிறைவேறி விட்டதென அவள் எண்ணினாள். ஏனெனில், அவள் இப்போது தன்னிடம் வைத்திருந்த பொருள்களையெல்லாம் அவன் கொள்ளை கொண்டு போக வேண்டுமெனக் கருதியிருந்தானா யின், அவன் அவள் அறையினுட் புகுந்து அவள் உறங்குவதாக எண்ணிய சென்ற இரவைக் காட்டினும் வேறு நல்ல சமயம் எங்ஙனம் வாய்க்கக்கூடும்? ஆகவே, அதைப்பற்றி அவளுக்கு இனி வழித்துணையைக் குறித்துச் சத்திரக்காரன் சொல்லிய வேண்டுகோளுக்கு அவள் இணங்கினாள். தான் செல்வம் மிகுதியும் உடையவளாதலால் அதன் செலவை அவள் ஒரு பொருட்படுத்தவில்லை. மேலும் அத்தகைய முன்னெச்சரிப்பை அவள் புறக்கணித்தால் அஃது ஒரு புதுமையாய்க் காணப்படும் எனவும் அஞ்சினாள். ஆதலால் அவள் அதற்கு உடன்பட்டு மறுமொழி புகன்றாள்; சத்திரத் தலைவனும் வேண்டு மேற்பாடுகளைச் செய்வித்ததற்கு விரைந்து போனான்.

அச்சமில்லையாயினும்,

குமுதவல்லிக்கும் சத்திரக்காரனுக்கும் இடையே நிகழ்ந்த இச்சம்பாஷணை நடையறையிலே நடந்தது; அப்போது தோழிமார் இருவரும் திரும்பவும் பயணம் தொடங்குவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/135&oldid=1581391" இலிருந்து மீள்விக்கப்பட்டது