பக்கம்:மறைமலையம் 13.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

107

வேண்டுவனவற்றை முடிக்கும்பொருட்டுப் படுக்கையறையிலே அலுவலாயிருந்தனர். ஆகையால் அவ்விருபெண்களும் நாம் இங்கெழுதிய சம்பாஷணையை ஒட்டுக் கேட்கவில்லை; குமுதவல்லியும் நல்லானைப் பற்றித் தான் கேட்டவற்றில் ஓர் எழுத்தாயினும் சொல்லி அவர்களைப் பயமுறத்தலாகாது எனத் தீர்மானஞ் செய்து கொண்டாள். அவள் அவர்களிடம் திரும்பிச் சேர்ந்தவுடன், தனது வழி செல்லும் அம்முகமாகவே, முதல் ஆறு நாழிகைத் தூரம் படைக்கலம் பூண்ட துணைவர் போவதால் தானும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளக் கருதுவதாக மாத்திரம் அவர்களுக்குச் சொன்னாள்.

நன்கு படைக்கலம் பூண்ட பன்னிரண்டு மனிதர் சத்திரக்காரனால் இவ்வழித்துணைக்கென்று வகுக்கப்பட்டார் கள்--இவர்கள் பெற்றுக் கொள்ளும் வருமானத்தில் திட்டமாய் மூன்றிலொரு பங்கு தனக்குரியதென்று ஒப்பந்தம் செய்து கொண்ட காரணத்தால் கூடியமட்டில் துணைவர் தொகையை மிகுதிப் படுத்துவதில் அவன் கருத்துக் கொண்டிருந்தான். இங்ஙனம் துணைவர் பின்வரக் குமுதவல்லி தன் பாங்கிமார் இருவரோடும் நீலகிரியை நோக்கிப் பயணம் புறப்பட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/136&oldid=1581392" இலிருந்து மீள்விக்கப்பட்டது