பக்கம்:மறைமலையம் 13.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

குமுதவல்லி நாகநாட்டரசி

115

'பேசாதிருமின், சிறுமிகாள்! அவரது நல்ல தோற்றத்தை விட அவரது ஆண்மையை எண்ணிப்பாருங்கள்; நாம் இப்போது தப்பிப் பிழைத்ததற்காகச் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதையும் எண்ணிப் பாருங்கள் என்று சிறிது கடுமையாகக் குமுதவல்லி பேசினாள்.

சிலநிமிஷம் பேசாமல் இருந்தார்கள். அப்போது குமுதவல்லி தன்னைப்படைத்த கடவுளுக்குத் தனக்குள்ளே வழிபாடு செலுத்தினாள்; மற்ற இருபெண்களும் அவள் உள்ளத்தில் நிகழ்வதை அறிந்து தாமும் அவ்வாறே செய்தார்கள்.

இப்போது நீலலோசனன் திரும்பிக் குமுதவல்லியும் அவள் பாங்கிமாரும் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்தான்; வந்தவன் சொன்னதாவது: “நங்கைமீர், உங்கள் வழித்துணைவர் அடைந்த காயங்கள் கொடியனவா யிருந்தாலும் உயிர்க்கு ஏதும் அச்சமில்லையென்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றேன். இந்தப் பாட்டையில் வந்து சேரும் ஒரு சிற்றடிப்பாதை வழியாக வன்றோ நானும் என் ஆட்களும் நல்ல சமயத்தில் அவ்விடம் வந்து சேர்ந்தோம். அதோ தோன்றும் மரங்களால் மூடப்பட்டு அவற்றின் நடுவே ஒரு சிறு குடிசை இருக்கின்றது. காயப்பட்ட மனிதர்களை அங்கே கொண்டுபோக வேண்டுமென்பது என் கருத்து; அவர்களை மிகவும் அன்பாய்ப் பார்ப்பதற்கு வேண்டிய உபகரணங்களை நிரம்பத் தந்து அவர்கள் அடைந்த காயங் களால் அவர்கள் சிறிதும் உயிர்ச்சேதம் உறாமல் செய்தன்றி அவர்களைவிட்டு வரமாட்டேன் என்று உறுதியாய் நம்பி

ஆறுதல் அடைமின்கள்.'

66

.

“கனவானே, தாங்கள் உண்மையாகக் காட்டிவருகின்ற அன்புடைமைக்கு ஆயிரம் வந்தனம்!" என்று சொல்லி, ‘அம்மனிதர்க்கு வேண்டுவனவெல்லாம் சேகரித்துத் தருவதும், சிறிது காலம் என்னிடம் சேவகத்திலிருக்கையில் அவர்கள் அடைந்த துன்பங்களுக்குப் போதுமான அளவு ஈடு கொடுத்து உதவுவதும் என்னுடைய கடமை அல்லவோ? எனக்காகத் தாங்கள் ஐயம் பகிர்ந்து கொடுக்க ஒருப்படுவீர்களா?” என்று குமுதவல்லிக் கேட்டாள்; அங்ஙனங் கேட்கையிலேயே, தனது பணப்பையினின்றும் பல பொன் நாணயங்களை எடுத்து, அவற்றை நாண் இனிமைகலந்த புன்முறுவலோடு நீலலோசனனி டம் நீட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/144&oldid=1581402" இலிருந்து மீள்விக்கப்பட்டது