பக்கம்:மறைமலையம் 13.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

129

இந்த உலகத்திலே எப்படி நேர்கின்றது பாருங்கள்! நம்மைக் குறித்துக் கள்வர் கூட்டத் தலைவனுடைய நோக்கம் எதுவா யிருக்கலாம் என்று என்னால் அளவிடக்கூடவில்லை: ஆனால், அவன் ஏதோ ஏதோ மிகக் கொடியதும் துயரமுள்ளதுமான இரண்டகஞ் செய்ய நினைத்தான் என்பதிற் சிறிதுஞ் சந்தேகம் இல்லை என்றாலும், நாம் தப்பி வந்ததைப் பற்றி நாமாக மகிழ்தலே போதும்; பெண்காள், இப்போது நாம் இவ்விரவு தங்கியிருப்பதற்கு ஓர் இடம் எங்கே தேடுவதென்று சிந்திக்க வேண்டும்.” என்றுரைத்தாள்.

மாலைக்காலத்து இருள் வரவரச் சூழ்ந்து வரலாயிற்று-- மசங்கற்பொழுது நாகநாட்டரசியையும் அவள் பாங்கிமார் இருவரையும் சூழ்ந்து கொண்டது;--இவர்கள் சென்ற சிறு வழியானது வீடுகள் காணப்படாத ஒரு பிரதேசத்தின் ஊடே சல்லுவதாகத் தோன்றியது. குதிரைகளோ ஒவ்வொரு நொடியும் தமது இளைப்பைப் பலபல அடையாளங்களாற் காட்டுவனவாயின; அந்த நங்கையும் அவள் பாங்கிமாரும் அவ்வாறே மிகவுங் களைப்படைந்தனர். ஆகவே, அவர்கள் மெதுவாகச் செல்லலாயினர்; சிறிது நேரத்துள் அச்சிறுவழி யானது ஓர் அகன்ற பாதையிற் போய்ச் சேர்ந்தது. அவர்கள் நீலகிரி நகரத்திற்கு நெருங்கிச் செல்லுகின்றார்களோ அல்லது தாம் செல்ல வேண்டிய அதற்கு வரவர அகன்று விலகிப் போகின்றார்களோ என்பதைச் சிறிதும் அறியாதவர்களாய்க் கெடுதிக்குத் துணிந்தே அப்பாதை நெடுகச் சென்றார்கள். என்றாலும் அவ்வளவு நல்ல பாதையின் கிட்ட எங்கேனும் சில குடியிருப்புகள் இருக்க வேண்டுமென்றும், அல்லது அது விரைவில் ஓர் ஊர்க்காயினும் நகரத்திற்காயினுங் கொண்டு போய் விடுமென்றும் உறுதியாக எண்ணினார்கள்.

உடனே சிறிது தூரத்தில் ஒரு விளக்கு வெளிச்சம் மினுக்கு மினுக்கென்று தோன்றக் கண்டார்கள். சில நிமிஷங்களில் ஒரு குடியானவள் மனையகம் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே தனக்கும் தன் பாங்கிமார்க்கும் அவ்விரவு தங்குவதற்கு உதவும்படி குமுதவல்லி கேட்டாள்; தனது தோற்றத்தினால் அவ்விடத்திற்கு உரியவள் என்று காணப்பட்ட நடுத்திர வயதினள் ஆன ஒரு பெண்பிள்ளை அவ்வேண்டுகோளுக்கு அன்புடன்

டம்

இசைந்தாள். கூலியாள் ஒருவன் அழைக்கப்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/158&oldid=1581418" இலிருந்து மீள்விக்கப்பட்டது