பக்கம்:மறைமலையம் 13.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

  • மறைமலையம்

13

களைப்படைந்த குதிரைகள் லாயத்துக்குள் கொண்டுபோகப் பட்டன; தாழ்மையானதாயிருந்தாலும் நேர்த்தியான அம் மனையின் கூடத்து அறையிலே அங்ஙனமே களைப்புற்ற அப்பிரயாணிகளுக்குத் திறமான சாப்பாடு கொண்டு வந்து பரிமாறப்பட்டது.

குமுதவல்லி எண்ணியபடியே அன்புடன் வந்து முதலிற் கதவு திறந்த அப்பெண்பிள்ளையே அவ்விடத்திற்கு உரியவள் என்று தெரிந்தது, அவள் ஒரு மலையநாட்டாள் ஆகையால், அவளிடத்தில் ன்னும் பேர் அழகின் அடையாளங்கள் இருந்தன; ஆனாலும் அவள் முகத்திலே கவலைக்கும் துன்பத்திற்கும் உரிய குறிகள் புலப்பட்டன. அவளோ ஒரு விதவை; முறையே பதினேழு பத்தொன்பது வயது உள்ளவர் களாய்ப் பலகைமேல் உணவு கொண்டு வந்து பரிமாறிய இரண்டு இனிய அழகு வாய்ந்த பெண்கள் இவளுக்குப் புதல்விகள். அவள் கணவன் தன் வயலிலே நடந்து கொண்டு போம்பொழுது ஒரு கரும்பாம்பினாற் கடிக்கப்பட்டுச் சில ஆண்டுகள் முன்னே இறந்து போனான்; அது முதல் அந்தக் காணியைப் பராமரிக்குங் கடமை முழுதும் அவ்விதவையின் மேலதாயிற்று. ஆயினும், அவள் அதனைப்பயன் படும்படி நடத்திவந்தாள்; பொருள் அளவில் அவள் குறை சொல்லு வதற்கு ஒன்றும் ஏதுவில்லை.

உரையாடிக் கொண்டிருந்தபோது நாகநாட்டரசி அவ்வன் புள்ள விதவையைப்பற்றித் தெரிந்த விவரங்கள் இவ்வளவே. தன்னைப்பற்றியோ குமுதவல்லி தான் நீலகிரி நகரத்திற்குப் பயணம் போவதாகவும், நான் வழிதப்பி வந்து விட்டடதனாலே தானுந் தன்தோழிமாரும் இவ்வுதவியைப் பெற வேண்டிய தாயிற்று என்றும் மாத்திரங்கூறினாள். அவள் சிறிதேனும் நல்லானைக் குறித்துப் பேசவில்லை; ஏனென்றால், பயங்கரமான நல்லானால் தான் துன்புறுத்தப்பட்ட செய்திகளை அவள் அவ்வீட்டுக்காரிக்கு எடுத்துச்சொன்னால் அக் கொள்ளைக் காரர் தலைவன் தன்னிடத்தில் புதுவிருந்தாய் வந்த அவளைத் தேடிவருவான் என்னும் அச்சத்தினால் இவ்விதவை தம்மை இங்கே தங்க விடமாட்டாள் என்று அஞ்சினாள். இந்த மலையநாட்டு விதவையிடமிருந்து குமுதவல்லி தெரிந்து கொண்ட ஒரு செய்தி மனத்திற்குத் தளர்ச்சியைத் தருவதாயிருந் தது. அது, தான் நீலகிரிக்கு முப்பத்தைந்து மைல் தூரத்தில் இருப்பதாகத் தெரிந்ததே; ஆகவே, தானும் தன் தோழிமார் களும் அப்பஞ்சாலைத் தலைவன் வீட்டுவாசலிலிருந்து ஓடிவந்தமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/159&oldid=1581420" இலிருந்து மீள்விக்கப்பட்டது