பக்கம்:மறைமலையம் 13.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் - 13

என்று அறிந்து கொண்டாள்; ஆகவே, நீலகிரி நகரத்தை நோக்கிச் செல்லும்வழியில் காணப்படும் கிராமத்திலாவது நகரிலாவது தக்க துணையொன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்னுந் தீர்மானத்தினளவில் நாகநாட்டரசி தன்னைத் திருத்திசெய்து கொண்டாள்.

குமுதவல்லியும் அவள்பாங்கிமாரும் தாம் பெற்றுக் கொண்ட அன்பான உதவிக்காக நன்றி மொழிகளும் கடமை களுஞ் சொல்லிவிட்டு, அக்கைம்பெண்ணினிடத்தும் அவள் புதல்விமார் இருவரிடத்தும் விடைபெற்றுக் கொண்டார் கள். உதார குணத்தோடு செய்யப்பட்ட உதவிக்காகக் கைம்மாறு ஒன்றும் அவ்விதவை விரும்பாமலும் எதிர் பாராமலும் இருந்தும், குமுத வல்லியானவள் சமயம் பார்த்து மறைவாய் இரண்டு, வகுமதிகளை அவ்விரு பெண்களுக்குங் கொடுத் தாள்; திருப்பவும் இப்போது நமது அழகிய கதாநாயகி தன் அன்புள்ள பாங்கிமாரோடு பயணஞ் செல்ல நாம் காண்கிறோம்.

-

ஏறக்குறைய அவசியமாய்க் குறிக்கவேண்டிய இரண் ாரு செய்திகளைச் சொல்லவேண்டியிருந்தும், இதுவரையில் நாம் சொல்லிக்கொண்டு வந்ததை அவற்றிற்கு நடுவே நிறுத்த வில்லை; ஆகையால், இப்போது இடம்பெற்றமையின் அதனைச் சொல்லிவிடுவோம். அப்பஞ்சாலைக்காரன் வீட்டண்டை யிலிருந்து தான் கலவரமாய் ஓடிவந்த பிறகு ஒழிவுகிடைத்தமை யால் குமுதவல்லி இப்போதுதான் பயங்கர நல்லானைத்தவிரப் பிறன் அல்லன்எனத் தீர்மானமாக எண்ணிய அவ்விளம் பௌத்தனுடன் தான் சிறிதுநேரங் கொண்ட பழக்கத்தைப் பற்றிச் சிந்தித்தபொழுது, தான் சிறிதுநேரமே யாயினும் பற்றுதல் வைத்த ஒருவன் அவ்வெண்ணத்திற்கு அங்ஙனம் எள்ளளவேனும் தகுதியில் லாதவனாய்ப் போனதைப்பற்றி மிகுந்த வருத்தங் கொள்ளப் பெற்றாள். தம் வகுப்புக்குரிய உடம்பின் மிக்க அழகெல்லாம் முறையே ஒருங்கு திரண்டு உருவாகிய இருவர் அங்ஙனந்தமக்குள் ஏதோ அத்தன்மைத் தாகிய பற்றுதல் கொள்ளப்பெறாது ஒருங்கு கூட்டப்படுதல் கூடாதேயாம் என்பதனை முன்னரே கூறிப்போந்தாம். குமுதவல்லியின் அளவு கடந்த வசீகரத்தினாலும், அமைதியி னாலும், அறிவினாலும் நீலலோசனன் உள்ளத்தில் எழுந்த எண்ணமானது ஏற்கனவே ஏதோ காதலோடு மிகவும் இன்பப்பட்டதொன்றாய் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/167&oldid=1581434" இலிருந்து மீள்விக்கப்பட்டது