பக்கம்:மறைமலையம் 13.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம் 13

வியாக்கிரவீரனும் மிகவுந் திருப்தி அடைந்தார்கள்; முந்தின வனான கேசரி வீரன் குமுதவல்லியின் வசீகரத்தால் தன் இளைய எசமானன் நெஞ்சங் கவரப்பட்டது குறித்துச் சிறிதும் துயரம் அடையாமலே இருந்தான்.

ஆனால் திடீரென்று அம்மூவரும் உட்கார்ந்திருந்த அறையின் கதவு அச்சத்திரத்தின் இடத்தின் அளவு நெருக்கமாய் இருந்தமையால் எசமானனும் அவன் ஆட்களும் இருத்தற்குத் தனித்தனி அறைகள் வகுக்கப்படவில்லை- திறக்கப்பட்டது. அப்பஞ்சாலைத் தலைவன் உள்ளே வந்தான்.

"ஐயா, வாலிபரே, நல்ல பெண்கள் கூட்டத்தை என்னு டைய உபசரணைக்குக் கள்ளமாய் அனுப்பினீர்! நான் அடைந்த அவமானத்திற்காக இவ்வூரிலுள்ளஆறு நல்ல தடியர்களை ஒன்று சேர்த்து உம்மையும் உமக்குத் துணைவந்த இவர்களையும் நன்றாய் பழுக்கப்புடைத்தேனானால் என் மனம் ஆறும்1 நீங்கள் நல்லொழுக்கம் உள்ளவர்கள் அல்லரென எனக்குத் தோன்று கின்றது- இல்லாவிட்டால் அந்தமாதும், அவள் பாங்கிமாரும் அங்ஙனம் நடந்திருக்கமாட்டார்களே." என்று அவன் உரத்துக் கத்தினான்.

66

‘அகந்தையுள்ள முதிய மனிதனே! என்ன பேசுகின்றாய்?” என்று நீலலோசனன் துள்ளி எழுந்தான்.

அதற்குப் பஞ்சாலைக்காரன் கடுகடுப்பான பார்வை யோடுங் குரலோடும் என்ன பேசுகிறேனா? அந்தப்பெண்ணும் அவள் தோழிகளும் உங்களையொத்த பௌத்தர்களின் வழித்துணையை வேண்டாமென்று தாம் பிரிந்து போக வேண்டித் தக்க சமயத்தை நாடியதற்கு ஏதோ நல்லகாரணம் இருந்திருக்கவேண்டும்." என்று மறுமொழி புகன்றான்.

"பிரிந்தாபோயினார்கள்?” என்று நீலலோசனன் திடுமெனக் கூவினான். “உன்னுடைய சொற்கள் எதனைக் குறிக்கின்றன?”

66

அவர்கள் பறந்தோடிப்போனார்கள்" என்று விடை பகர்ந்தான் பஞ்சாலைக்காரன்.வீட்டண்டை போனதும்”

66

6

ஓடியா போனார்கள்?” என்று நீலலோசனன் மறுபடியும் கூவினான்; அங்ஙனமே வியாக்கிரவீரனுங் கூவினான்.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/169&oldid=1581438" இலிருந்து மீள்விக்கப்பட்டது