பக்கம்:மறைமலையம் 13.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

குமுதவல்லி நாகநாட்டரசி

195

இத்தகைய எண்ணங்களினாலே குமுதவல்லி உந்தப் பட்டு, உயர்ந்த இடத்தில் தொழும்பனாயிருக்கும் ஓர் இளைஞனி டத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு பெருமாட்டி எவ்வளவுக்கு முகங் கொடுத்து இன்சொற் பேசலாமோ அவ்வளவுக்குச் சந்திரனிடத்திற் பேச இசைவு கொண்டாள்; பிறகு அவன் தன் நிலைக்குவந்து அமைதி பெற்றவுடனே மிகவும் தாழ்மையோடு தன்னை வணங்கவே, அவள் மகிழ்ந்த குரலில், “சந்திரா, கடைசியாக யான் பத்திரமாய் இங்கு வந்துசேர்ந்தேன் பார்த்தனையா?” என்று மொழிந்தான்.

இதற்குள் தனதுமுகத்தை முழுதும் அமைதிப்படுத்திக் காண்டவனான சந்திரன் குமுதவல்லியை நோக்கிப், "பெருமாட்டி, தாங்கள் இப்படிச் சொல்வதற்குக் குறிப்பான காரணம் ஏதும் இல்லையென்று நம்புகின்றேன்." என்று கூறிக்கொண்டே, பெரியவாயிலின் கீழ்த் தாம் திருப்பி நுழை வித்த குதிரையினின்றும் அவ்வம்மையார் இறங்குதற்கு உதவி செய்தான்.

"சில சிறிய இடர்களை வழியில் அனுபவித்தேன் என்றாலும் கடந்துபோன அவைகளை இப்போது நினைப்பதிற் பயனில்லை என்று குமுதவல்லி மொழிந்தாள்.”

என்று இங்ஙனம் விடைபகருகையிலேயே குமுதவல்லி தனது முக்காட்டை அப்புறம் எடுத்துவிட்டுச் சந்திரன் முகத்தைக் கள்ளமாய் ஒருபார்வை பார்த்தாள்; ஆனாலும் அவள் தனது மனத்திலிருக்கும் ஐயத்தை உறுதிப்படுத்தத்தக்கது ஏதும் அவளது பார்வையில் தோன்றவில்லை. அப்பெரிய வாயிலின் உள்ளே இருபுறத்தும் இருந்த வீட்டுவாசல்களின் உள்ளிருந்து ஆணும் பெண்ணுமாகிய ஊழியக்காரர் பலர் வெளியே வந்தனர்; சந்திரனோ அவ்விளையகங்கையும் அவள்தன் தோழிமாரும் உள்ளேபுகும்படி தான் மரியாதை யோடும் அப்பால் விலகி நின்றான். அவ்வீட்டின் ஊழியக் காரர்க்குத் தலைவியென்று காணப்பட்ட ஒருவயதுமிக்க பெண்பிள்ளை, குமுதவல்லியை வரவேற்க முற்பட்டுவந்தாள். வந்து, “பெருமாட்டி என் தலைவர் இல்லத்திற்கு உங்கள் வரவு நன்றாகுக!” என்று மொழிந்தாள்.

நாகநாட்டரசி தகுதியான இன்சொற்களால் மறுமொழி கூறினாள். பிறகு அகன்ற படிக்கட்டு களின்வழியே ஏறி மிகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/224&oldid=1581497" இலிருந்து மீள்விக்கப்பட்டது