பக்கம்:மறைமலையம் 13.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

❖ 13❖ மறைமலையம் – 13

பாட்டை நெடுக வந்த களைப்பான பயணத்தின் பின்னர் அம்முழுக்கு மிகவும் இளைப்பாற்று வதாயிருந்தது. அவள் தன் றோழிமாரோடும் இருக்கும் அறைக்குத் திரும்பி வந்ததும், நேர்த்தியான உணவு கொண்டு வந்து மேசை மேற்பரப்பி வைக்கப் பட்டிருந்தது; இன்னும் ஏதேனும் வேண்டி யிருந்தால் அதனைக்கொண்டு வருவோரை அழைக்குங் கருவியாக ஒருசிறிய வெள்ளி மணியொன்று கைக்கருகே அம்மேசைமேல் இருந்தது. சுவைபல வாய்ந்த திறமான மெல்லிய உணவுப்பொருள்கள் மிக ஆழ்ந்த அறிவோடு அடுத்தடுத்து வைக்கப்பட்டிருந்த மையாலும், வாயூறச்செய்யவும் பழவகை களோடும், இளைப் பாற்று மிக்கும் பானகங்களோடும் உணவிற்குரிய ஒவ்வொன்றும் மிகுந்த கருத்தோடும் அமைக்கப் பட்டிருந்தமையாலும் சுவையை மிகக் கருதிப்பார்ப்பவர்க்கும் குறை சொல்லத்தக்கது ஏதுமேயில்லை. மேசையண்டை தன்னோடு கூட இருக்கும்படி குமுதவல்லி தன்றோழிமார்க்கும் கற்பித்தாள்; அவர்கள் தமக்கெதிரிலிருந்த மெல்லிய தின் பண்டங்களை எடுத்து அருந்தினார்கள். மனோகரர் ஊரில் இல்லாத விஷயம் மாத்திரம் கலவாவிட்டால், தான் சேர வேண்டிய இடத்திற்குப் பத்திரமாய் வந்து சேர்ந்த தைப்பற்றியும், தனதுமோதிரம் தன்னிடம் திரும்பவந்து பொருந்தி யதைப் பற்றியும் குமுதவல்லி முழுதும் மனஅமைதி பெற்றி ருப்பள்; ஏனென்றால், தனக்குரிய நாகநாட்டிலிருந்து மலை நாட்டின் தலைநகராகிய நீலகிரிக்கு அயர்ச்சியினையும் அபாயத்தினையும் தரும் நீண்ட பிரயாணத்தைத் தான் செய்யும் படி தூண்டப் பட்டது ஏதுக்காகவென்று தெரிந்துகொள்ள அவள் இயல் பாகவே ஆவலுற்றுக் கவன்றாள். மேலும், சில நாழிகை நேரங்களுக்குமுன்னே நேர்ந்த அல்லல்களை நினைக்கவே அவள் துயரம் அடையாதிருக்கக்கூட வில்லை; இன்னும் அத்தனை இளமையும் அழகும் அறிவும் வாய்ந்த நீல லோசனன் அவள்தான் நினைத்துக்கொண்டபடி அவ்வளவு பெருங்குற்றம் உடையவனானரைதத் துயரத்தோடும் உண்ணி வருந்தினாள்.

சாப்பாடு முடிந்ததும், குமுதவல்லி வசதிக்காகச் செய்த மைக்கப்பட்ட பலவகை ஏற்பாடுகளும் அவளுக்கு இசைவாக இருந்தனவாவென்று தெரிந்துகொள்ளும் பொருட்டு அவ் டுக்கார முதியோள் அவர்கள் முன்னேவந்தாள்; அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/227&oldid=1581500" இலிருந்து மீள்விக்கப்பட்டது