பக்கம்:மறைமலையம் 13.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் - 13

“யான் இறந்தவர்களிடமிருந்து நேரேவராவிட்டாலும் என்று திரும்பவுந் தொடர்ந்து “இறந்தவர்கள் பொருட்டாகயாக வந்திருக்கிறேன். அதனால்யான் இறந்தவர்களிடமிருந்து உண்மையாக வந்த தூதியே உயிரோடிருப்பவர் தமது பேதைமை யால் இறந்தவர்கள்மேல் ஏற்றிச்சொல்லும் ஆவிக்குக் கீழ்ப் படிந்து யான் தூதாக வந்திருக்கிறேன்!” என்று உரைத்துத், தன் கண்களைக் குமுதவல்லி மேல் வைத்து ஊடுருவப்பார்த்துக் கூறுவாள்: "பெருமாட்டி, கள்வர் தலைவனான நல்லானுக்கு நல்வினையற்ற மனைவியாய் இறந்துபோன மீனாம்பாள் தங்களுக்கு பகைவரான சிலரோடு கட்டுமானமாய்ச் சேர்ந்து சூழ்ச்சி செய்தாள்; அவன் இறக்குந்தறுவாயில் அவளது தலையைத் தங்கள் மார்பில் அணைத்துக்கொள்ளும்படி புத்தர் தங்களை அவள் செல்லும்வழியிற் செலுத்தின அதே சமயத்தில் அவள் உங்களுக்கு ஒரு பொல்லாங்கு இழைக்கக் கருத் துற்றிருந்தாள். அவளுடைய ஏவற்காரிகள் வாயிலிருந்து யான் பலவற்றைக் கேட்டுணர்ந்தேன்."

ரு

“நல்வினையற்ற மீனாம்பாள் என்னிடத்திற் தீய எண்ணங் கள் வைத்திருந்தனளாயின் யான் அவளை மன்னித்து விட்டே னே! ஓ! என் நெஞ்சார யான் அவளை மன்னித்துவிட்டேனே!” என்று குமுதவல்லி இடைப்புகுந்து கூறிளாள்.

66

பெருமாட்டி, நீங்கள் அவளோடு தனிமையாக விடப் பட்ட போது, யானும் அவள் தோழிமார் இருவரும் சிறிது சேய்மையிற் போயிருந்தபோது, நீங்கள் அவள்மேற் குனிந்திருந்த வகையினாலும் உங்கள் பார்வையினாலும் உங்கள் பயில்களி னாலும் உங்கள் முகத்தை அவள் ஏறிட்டு நோக்கியதனாலும் தாங்கள் அவளை மன்னித்ததை உறுதிப்படுத்திக் கொண்டிருந் தீர்களென்று யான் தீர்மானஞ் செய்யக்கூடியதாயிருந்தது. இந்தக்காரணம் பற்றியே யான் இப்போது இங்கிருக்கின்றேன். இந்தக்காரணம் பற்றியே தங்களுக்குரிய இனத்தவர்களும் அவர்களுக்கு னமானவர்களும் எண்ணுகிறபடி அந்த மன்னிப்பைப் பின்னும் உறுதிப்படுத்தும்படி தங்களை ஆணையிட்டுக் கேட்டுக்கொள்ளப்போகிறேன். பெருமாட்டி, இறந்துபோகும் ஒருவருக்குச் சொல்லிய மன்னிப்பு இறந்து போன அவரது பிணத்தின் பக்கத்தேயிருந்து மேலும் மிகுந்த பரிசுத்தத்தோடும் பயபக்தியோடும் திரும்பவும் வற்புறுத்தப்

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/231&oldid=1581504" இலிருந்து மீள்விக்கப்பட்டது