பக்கம்:மறைமலையம் 13.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

அதிகாரம் - 14 மனோகரர்

மலையநாட்டிற் பெரிய வியாபாரியான மனோகரர் முன்னிலையிலே தம்முளிங்ஙனம் ஒருவரையொருவர் எதிர்ப் பட்டபோது நீலலோசனனுக்குங் குமுதவல்லிக்கும் உண்டான உள்ள நிகழ்ச்சிகள் வேறு வேறியல்பினவாய் இருந்தன. தான் முதன் முதற் கண்டநேரந்தொட்டுத் தன் நெஞ்சை விட்டுத் தவறாமல் அமர்ந்த அவ்வழகிய இள மங்கையின் வடிவைக் காண்டலும் அப்பௌத்த இளைஞன் மிகவுங் கிளர்ச்சியான களிப்புக் கொள்ளப் பெற்றான். தன்னிடத்து அவள் மிகவும் புதுமையாக நடந்து கொண்ட தனைப் பற்றி இவன் அடைந்த வியப்புங் கலக்கமும் ஒரு நொடிப் பொழுது இவள் இப்போத டைந்த பெரு மகிழ்ச்சியினால் விழுங்கப்பட்டிருந்தன. இனி மற்ற வகையிற் குமுதவல்லியோ தனக்கெதிரே கொள்ளைக்கார நல்லானையே தான் பார்ப்ப தாகக் கொண்ட மனத்துணிவின் வயப்பட்டவளாய் இருந்தாள். அவன் பெயரை வெளிவிட்டுச் சொல்லாமலிருந்ததும், அல்லது தன் உள்ளத்திற் பட்டதை வெளியே திறப்பாக விடாமல் இயன்றமட்டும் விலக்க முயன்றதும் அவள் மீனாம்பாளுக்குக் கொடுத்த மொழியுறுதி யின்பால் வைத்த நன்கு மதிப்பினாலே யாம். இங்ஙனமாக நீலலோசனன் ஒரு பக்கத்தில் அவளை வியப்புங் களிப்புங் காதலுங் கலந்த பார்வையோடு நோக்கிக் கொண்டிருக்க, அவளோ மற்றைப் பக்கத்தில் கீழ் நோக்கிய பார்வையினளாயும், நாணமுடையளாயினும் விழுமிய ஒழுக்கம் பொருந்தின வளாயும் மனோகரர் தனக்குச் சொல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

நாம் முன் சொல்லியபடியே இம்மலையநாட்டு வியாபாரி யானவர் பெரிதும் நன்கு மதிக்கப்படுந் தோற்றமுடைய வராயிருந்தார். அவருடைய வயது அறுபத்தெட்டு அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/253&oldid=1581527" இலிருந்து மீள்விக்கப்பட்டது