பக்கம்:மறைமலையம் 13.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுதவல்லி நாகநாட்டரசி

227

கண்ணாடி போன்று என்றும் இருப்பதாகிய முகத்தினையே ஒரு கருவியாகக் கொண்டு உயிரின் ஆழத்தையும் உள்ளத்தின் ஆழத்தையுந் துருவிக் காண்பதில் தம்மை மிகவுந் திறமை யுடையராகச் செய்தற் கிசைந்த அளவு அம்மலைய வியாபாரி நீண்டகாலம் உயிர் வாழ்ந்து வந்தனர், உலகினி யற்கையை வேண்டியவளவுக்குக் கண்டிருந்தனர்.

குமுதவல்லி முதலிற் புகுந்த போது, மனோகரர் எதிரே நீலலோசனன் வணக்கமான நிலையில் நின்று கொண்டிருக்கக் கண்டாள்: அவர் தம் முதுமைக்கும் அவர்தந் தோற்றத்திற்கும் அம்மாளிகையில் விருந்து புறந்தருந்தலைவராயிருக்கும் அவர் தம் நிலைமைக்கும் தக அதே வணக்கமான உணர்வோடு அவளும் அங்ஙனமே இப்போது நின்று கொண்டிருந்தாள். அவ்விருவரது நடத்தையும் அவருக்கு உவப்பினைத் தந்தது; கடைசியாக அவர் வாயைத் திறந்தது, “என் இளைய கேசர்களே--நாம் இப்போது தாம் முதன்முறையாக ஒன்று கூடினோ மாயினும் யான் உங்களிரு வரையும் அங்ஙனமே கருதுகின்றேன்-- நரை முதியோர்க்குரிய மதிப்பினை நீங்கள் அறியாமலிருக்க வில்லை. என் முன்னிலையில் நீங்கள் நின்று கொண்டிருக்கின்றீர்களே; மக்களுக்குரிய நிலைமைகளின்படி நம்முடைய நிலைமைகளைப் பார்த்தால் அம்முறையில் யான் உங்களிருவரையும் விட மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளேன். மாட்சிமை வாய்ந்த அரசி தங்களிருக் கையில் அருள் கூர்ந்து அமருங்கள்.” என்று குமுதவல்லிக் குரைத்துப் பின்னும் நீலலோசனன் பக்கமாய்த் திரும்பி “அரச, தாங்களும் இருக்கையில் அமரும்படி வேண்டிக் கொள்ளு கிறேன்.” என்று அவர் கூறினார்.

ஓர் அரசிக்குக் கீழ்ப்படாத நிலைமையினைக் குறிக்கும் மொழிகளால் குமுதவல்லி முன்னிலைப்பபடுத்திக் கூறப் படுதலைக் கேட்டதும் அவ்விளம் பௌத்தன் இறும்பூதுற்றுத் திடுக்கிட்டான்; இனிமற்ற வகையிற் குமுதவல்லியோ நானும் அங்ஙனமே திடுக்கிடாமல் இருக்கக்கூடவில்லை- ஏனென்றால், அரசியல்முறையில் எத்தகையோர்க்குரிய கோலத்தில் அக் கள்வர் தலைவன் தன்னை மறைத்து அம்மலைய வியாபாரி முன் வந்து சேர்ந்தானென்று அவள் வியப்புற்றாள்.

66 என்

ளைய நண்பர்காள், என்று மனோகரர் கூறுகையில், நீலலோசனன் தமது இடதுகைப்புறத்தும் குமுத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/256&oldid=1581530" இலிருந்து மீள்விக்கப்பட்டது