பக்கம்:மறைமலையம் 13.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மறைமலையம் 13

6

நீக்கத்தக்க வகையாய்க் கூறுவார்: “அரசி, தங்கள் கண்ணிமை நாணத்திற்கு நான் பிழை செய்ய மாட்டுவேன் என்று ஒருபோதும் நினையாதீர்கள். நாகநாட்டரசி தமது பேரழகிற்குப்பெற்ற புகழினும் தமது நல்லொழுக்கத்திற்குப் பெற்ற புகழிற் சிறிதுங் குறைந்தவர் அல்லரென்பதும் - ஓர் அரசிக்குரிய மேன்மையால் தாங்கப்படுதலினும் கன்னிமைப் பெருமையால் தாங்கப்படுதலிற் சிறிதுங் குறைந்தவர் அல்லரென்பதும் நான் அறிவேன். சுருங்கிய பொழுதில் வழி நடந்து செல்லுதற்குத் தோழமையாய்க் கொண்ட அ யலவனான ஓர் ஓர் இளைஞனிடத்தில் தாங்கள் மையல் கொள்ளத்தக்கவர் கெளென்று, இனிய அரசி, அத்தனை பரும்படியான ஒரு நினைவை யான் கொள்ளத்துணிவேனென நீங்கள் நினைக்கி றீர்களா? இல்லை: என் சொற்களுக்கு வேறு பொருளுண்டு. இப்போது உண்மையைச் சொல்லிவிடுகின்றேன் உங்களிருவர் கைகளும் நேசவுரிமையிற் பிணைக்கப்படுவனவாக! னெனில், உங்கள் நரம்புக் குழாய்களில் ஒரே குடும்பத்திற்குரிய இரத்தம் புரண்டோடுகின்றது - நீங்கள் இருவரும் மைத்துனக் கிழமை உடையீர்கள்!”

நீலலோசனன் குமுதவல்லி என்னும் அவ்விருவர் வாய்களி னின்றும் உடனே வியப்பொலிகள் தோன்றின; சிறிது நேரம் மிகப்பெரிய திகைப்பின் வயப்பட்டவர்களாய் இருந்தமையால், அவர்கள் தமது இருக்கையினின்றும் எழுந்து நின்றனராயினும், தாம் கைதழுவவேண்டுமென்று கற்பிக்கப் பட்டபடிசெய்ய

நினைவற்றவர்களாய் இருந்தனர்.

“என் இளையோர்களே, நீங்கள் இருவீரும் நாகநாட்டை ஒருகால் அரசாண்ட கோச்செங்கண்மன்னற்குப் பேரப் பிள்ளைகள் ஆவீர்கள் என்பது உண்மையேயாம்.” என்று மனோகரர் வணக்கவொடுக்கத் தோடுங் கூறினார்.

பௌத்த சமயத்தவனான நான், நாகநாட்டில் அரசுபுரிந்த சைவசமய அரசன் கால்வழியில் வந்தவனாதல் எவ்வாறு கூடுமென்றெண்ணி நீலலோசனன் பெரிதுந்திகைப்புற்றனனா யினும், வியப்புங்களிப்பும் ஒருங்கு கிளரப்பெற்றவனாய், “மைத்துனி, என் கையை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்!” என்று உரத்துச்சொன்னான்.

குமுதவல்லியும் தான் கேட்டவைகளைப் பற்றித் திகைப் புற்றனளாயினும், போற்றத்தக்க தம் நண்பனான அம்முதியோள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/261&oldid=1581536" இலிருந்து மீள்விக்கப்பட்டது