பக்கம்:மறைமலையம் 13.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

239

நடுங்கிய மெல்லியகுரலோடு “அவர்கள் இன்னும் உயிரோடிருக் கிறார்களா? ஓ! இல்லை! இல்லை! இந்த நம்பிக்கை வைக்க யான் துணியலாகாது - அப்படியிருந்தால் இத்தனை காலம் யான் அவர்களால், ஏற்றுக்கொள்ளப்படாமல் கைவிடப்பட்டிருந்தி

ரேன்!” என்று சொல்லினான்.

66

"என் அரிய இளைய நேசரே, தாங்கள் மிகவும் திறமாய்க் கருதுகிறபடியே தான்.” என்று மனோகரர் உருக்கத்தோடு கூறினர்; குமுதவல்லியின் இரக்கமான பார்வையும் தன் மைத்துனனின் பெற்றோர்கள் உயிரோடில்லை யென்று அவளும் அவனுக்குத் தெரிவிப்பனபோற் குறி காட்டினள்.

“அச்சோ, என் அரிய தாய் தந்தையரே!” என்று நீலலோசனன் முணுமுணுத்துரைக்கையில் கண்ணீர் அவன் கன்னங்களில் வடிந்தது. “வணங்கத்தக்க மனோகரரே, அவர்கள் எங்ஙனம் இறந்தார்களென்பதை எனக்குச் சொல்லுங்கள், சொல்லுங்கள்.

66

""

'தங்கள் இரக்கத்தக்க அன்னையர் தாங்கள் பிறந்த சிறிதுநேரத்திற்கெல்லாம் ஒருகாய்ச்சலாற் கொண்டு போகப் பட்டார்.” என்று அம்மலைய வியாபாரி மறுமொழிந்தார். “தங்கள் தந்தையார் முடிவைப்பற்றி யான் இப்போது பேசப்போகிறேன். என் இளையநண்பரே, உங்கள் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, இந்த முடிவு துயரமான தொன் றென்பதைக் கேட்க ஆயத்தமாய் இருங்கள். மன்னரின் மூத்த மகளுக்குத் திருமணமாகிச் சில ஆண்டுகள் வரையில் பிள்ளை பிறந்திலது.”

“இரங்கத்தக்க என் தந்தையார்!” என்று குமுதவல்லி முணுமுணுத்தாள்.

“இப்போது எனது கதையில் துயரமான பகுதியைப்பற்றிச் சொல்லப் போகிறேன்," என்றுரைத்து மனோகரர் பின்னுங் கூறுவார்: நீலலோசனரே, நீங்கள் முற்றுந்தெரிந்துகொள்ளும் பொருட்டு, முதலில் யான் சொல்லியபடி, இக்குடும்ப நிகழ்ச்சி களையும் வரலாற்றுக் குறிப்புகளையும் நெடுகச் சொல்ல வேண்டுவது எனக்கு அகத்தியமாய் இருக்கின்றது. நீங்கள் பிறந்து சில திங்கள் தாம் சென் உங்களைச் சூழநடந்தவற்றை உணராத சிறுமகவாய் .இருந்தீர்கள் - அப்போது அரிடமன்னன் நாகநாட்டின்மேற் படையெடுத்து வந்தான். ஆண்டில் முதிர்ந்த

றன

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/268&oldid=1581544" இலிருந்து மீள்விக்கப்பட்டது