பக்கம்:மறைமலையம் 13.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

மறைமலையம்

13

நம்பிக்கையுள்ள ஒரு நண்பன் வழியாகச் செய்தியனுப்பினாலுங் கூட ஒருகால் அரிடமன்னன் ஆட்களுக்கு அயிர்ப்பு உண்டாகு மானால் அரசுரிமை திரும்பப்பெற்ற தம்மவர்க்கு இடைஞ்சல் விளையுமாதலால், தம்மருமகன் - குமுதவல்லி தங்கள் தந்தையார் - தமது முடிவைப்பற்றி முழுதுங்தெரியாதிருக்கவேண்டு மென்று அவர் விரும்பினார். தம்மருமகன் நாகநாட்டரசுக்கு உயர்த்த மப்பட்டதுபற்றி அம்முதிய மன்னன் மகிழ்ச்சி அடைந்தன ராயினும், தம் ஒரே மகனையும் அவர் கையேந்திச் சென்ற சிறுமகவையும் பற்றி அளவிறந்ததகவலை யடைய லானார்.யான் அம்மேற்கணவாய் மலைநாடுகள் எங்கணும் இயன்ற மட்டும் உசாவிப்பார்த்தேன், சிறிதும் பயன் படவில்லை. பின்னர்ச் சிறிது காலங்கழித்துக் காணாமற்போன இளவரசரும் அவர்தம் மகவும் மலைகளினிடையே மாண்டு போனார்களென்னும் செய்தி வந்து எட்டுவதாயிற்று; அப்போது அதனை நம்பிப், போற்றத்தக்க என் நண்பரான அம்முதிய கோச்செங்கண் மன்னருக்கு அதனை அறிவித்தேன். ஆண்டுகள்பல சென்றன - அம்முதிய அரசர் தாம் கண்டறிந்த அமைதியான அம்மறை விடத்தை விட்டுவரச் சிறிதும் விருப்பம் இன்மையினால் அதன்கண்ணே தாம் இருந்துவர லானார்.இன்றைக்குப் பதினெண்டிங்களுக்குமுன் கோச்செங்கண் மன்னர் கடுமையான ஒரு நோயாற் பற்றப்பட்டார்; அதனால் அவருக்கு மருந்து கொடுத்து உதவவேண்டுவது அகத்திய மென்று கண்டேன்.அப்பொழுது நீலகிரிநகரத்தில் பல வியப்பான பரிகாரங்கள் செய்து வந்த ஒரு துருக்கப்பெண்பிள்ளை இருந்தனள்: அவளை அம்முதியமன்னர் இருக்குந்தனியிடத்திற்கு என்னோடு அழைத்துச்செல்லத் தீர்மானித்தேன். ஆண்பாலாருள் ஒருவரை விடப் பெண்பால் ஒருவரை இவ்வுதவிக்கு அமர்த்திக் கொள்வது எளிதெனக் கண்டேன்; ஏனென்றால், யான் கட்டாய மாகப் பின்பற்றவேண்டிய சில எச்சரிக்கைகளுக்கு இணங்கும்படி ஒருபெண்பாலைத் தூண்டுவது மிக எளிது. யான் சொல்லுகிற அந்தப்பெண்பாலோடுயான் வழிநடந்துசென்ற போது, தான் திரிந்து கண்ட பலநகரங்களைக் குறித்தும் அவள் அடுத்தடுத்துப் பேசிக்கொண்டுவந்தாள். அவ்விடங்களைப்பற்றிப் பல்வேறு சிறு கதைகளும் சொல்லிக்கொண்டுவந்தாள். இங்ஙனம் பேசிக் கொண்டு வருகையில் அப்போது மேற்கரையை ஆண்ட சாக்கியதர்மன் என்னும் அரசனைக் குறிப்பிட்டு பேசலானாள்; அவ்வரசரின் அன்பும் உருக்கமும்மிக்க தகைமைக்கு ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/275&oldid=1581553" இலிருந்து மீள்விக்கப்பட்டது