பக்கம்:மறைமலையம் 13.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

பின்பு

253

தனக்குள் நினைப்பாளானாள். குமுதவல்லியின் நினைவுகள் வேறொருமுகமாய்த்திரும்பவே, அவ்விளைஞனான நீலலோசனன் கள்வர் தலைவனான நல்லானின் வேறான ஒருவனாவன் என்பதை நினைத்துச் சொல்லுக்கடங்காக் களிப்படைந்தாள்; அவனைப்பற்றி அத்தனை பொல்லாங்கான முடிபுக்குத் தான் சடுதியில் வரலானதை நினைந்து அவள் துயரமுற்றாள். ஆனாலும், நேற்று மாலையில் மீனாம்பாள் படுக்கையின் அண்டையில் அவனைத் தான் காணலானது என்னையென்று அவள் மறுபடியும் வியப்புற்றாள்.

இவ்வாறு குமுதவல்லி எண்ணமிட்டுக்கொண்டிருக்

கையில் அவ்வறைக்கதவை வந்து எவரோ தட்டுவாரானார்; அவ்வரசி அவ்வாளை உள்ளே வரும்படி கட்டளையிட்டாள்; இளையனான சந்திரன் அவளெதிரே சென்று நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/282&oldid=1581564" இலிருந்து மீள்விக்கப்பட்டது