பக்கம்:மறைமலையம் 13.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

குமுதவல்லி நாகநாட்டரசி

257

ஆ! ப்போது நினைவு கூர்கின்றேன்! யான் என் குதிரையிலிருந்து கீழ் இறங்குகையில், சில சிறு நிகழ்ச்சிகளைப் பற்றி யான் தற்செயலாய்ப் பேசினது உண்மைதான்; ஆனால், அவை கடந்து போய்விட்டமையால், இனி அவற்றைக்குறித்துப் பேசுவதிற் பயன் சிறிதுமில்லை. என்று குமுதவல்லி மொழிந்தாள்.

திரும்பவும் அவ் ஏவற்காரன் சொல்லுவான். “ஆம், பருமாட்டி, தங்கள் திருவாயினின்று அப்போது தோன்றிய சொற்கள் அதுமுதல் என் நினைவைவிட்டு அகலாதிருந்தன; ஏனென்றால் யான் முன்னமே சொல்லியபடி அவை சில இடர்களைக் குறிப்பிட்டன வென்று அஞ்சினேன்; நாகப் பூரிலுள்ள தங்கள் அரண்மனையில் தங்கள் வரவுபார்த்து யான் காத்திருக்கப் பெற்றபோது, அரசியார்க்கு யான் தெரிவித்துக் கொண்ட குறிப்புகள் ஒவ்வொன்றிலும் அசட்டையினாலாவது மறதியினாலாவது எதனையேனுஞ் சொல்லாமல் விட்டிருந்தே னாயின் அஃது என் மனத்தை நிரம்பவும் புண்படுத்துவதாகும்.

இங்ஙனம் சந்திரன் பேசியபோதெல்லாம், குமுதவல்லி சாய்மணைக் கட்டிலில் அழகியதாய் அரைவாசி சாய்ந்திருந்த படியே கீழ்நோக்கியபார்வையோடு இருப்பதுபோற் காணப் பட்டாள்; ஆனாலும், குற்றம் ஏதும் அறியாமையால் உண்மையான நெஞ்சத்தோடும் அவன் பேசினானோ, அல்லது குமுதவல்லி வழியில் அடைந்த இடர்களுக்கு இவன் உடந்தை யாயிருந்ததைப்பற்றி ஐயுறப்பட்டிருந்தால் அவ் ஐயத்தின் அளவை ஆழ்ந்தறியும் பொருட்டுக் கரவாயும் சூதாயும் நடந்துகொண்டானோ என்பதை அவ்விளைய ஏவற்காரன் முகத்தினின்று கூடுமானாற் கண்டறியும் வண்ணம் உண்மையில் அவள் கருத்தாய் நோக்கிக்கொண்டிருந்தாள். என்றாலும், அவனது பார்வையில் அவள் கொண்ட ஐயத்தை உறுதிப் படுத்தத்தக்கது ஏதுமில்லை -- எவரோ ஒருவரைப்பற்றி விழிப்பா யிருக்கும்படி இவளுக்குக் கற்பித்து மீனாம்பாள் மிகமெல்லச் சொல்லிய பெயர் மெய்யாக வனுடைய பெயரேயாகு மென்னும் நம்பிக்கையைத் திண்ணமாக்குவதற்கு இவனது முகத்தில் ஏதொன்றுங் காணப்படவில்லை. மற்று அவனுடைய ஏ சொல்லிலும் குறிப்பிலும் உண்மையை உருக்கத் தோடுபேசுந் தன்மையே காணப்பட்டது. இன்னும், ஏவற் காரணயிருப்பவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/286&oldid=1581598" இலிருந்து மீள்விக்கப்பட்டது