பக்கம்:மறைமலையம் 13.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

மறைமலையம் - 13

அஞ்சா ஆண்மையினையும் வள்ளற்றன்மையினையும் உயர்ந்த அறிவினையும் நிலைநிறுத்தும் அடையாளங்களை யான் முன்னமே அறிந்திருக்கின்றேன்.”

66

ஆம், குமுதவல்லி, நீங்கள் முதன் முதல் ஒருவரை யொருவர் எதிர்ப்பட்டபோது நிகழ்ந்தவற்றையும், ஒரு வேங்கைப் புலியினிடம் அகப்பட்டு மீண்டதையும் நீலலோசனர் தமது இளமைக்கு ஏற்ற நாணத்தோடும், எனக்கு விரித்துக் கூறினார்.” என்று மனோகரர் அதற்கிசைந்துரைத்தார்.

66

அக்கொடிய விலங்கினாற் புண்படுத்தப்பட்ட மலை நாட்டார் இருவர்க்கு அவர் தாம் அன்போடு செய்த உதவி களையும் தமது பணப்பையிலிருந்து மிகுதியாய் எடுத்துக் கொடுத்த பரிசிலையுங்குறித்து அங்ஙனமே தங்கட்குத் தெரிவித் தனரா?” என்று வினவிப் பின்னும், “ஆ! அவரது ஆண்மைக்குத் தக்கவாறே அவரது வள்ளன்மையும் அதனையடுத்துத் தோன் றியது; அவரது அறிவின்றன்மையைப் பற்றியோவென்றால், அஃது எவ்வளவு நன்றாய்ப் பண்படுத்தப்பட்டிருக்கின்ற தென்பதனை அறியாமல் ஒரு நாழிகை நேரங்கூட அவருடன் இருக்க முடியாது," என்று பேசினாள் குமுதவல்லி. று

அங்ஙனம் பேசியவுடன் குமுதவல்லி நாணத்தால் முகம் மிகச் சிவக்கத் தன் தலையை வெட்கத்தோடுங் கீழே குனிந்து கொண்டாள்; ஏனென்றால், தன் மைத்துனன் செய்கையும் இயற்கையையும் பற்றித் தான் உண்மையோடு கரவடமின்றி வியந்துரைத்த சொற்கள், தனது கன்னிமை நாணத்திற்குத் தகாத அத்துணைக் கிளர்ச்சி வாய்ந்த புகழுரைகளைத் தான் பகரும்படி செய்து விட்டனவோ என்னும் நினைவு அவளுள்ளத்திற் சடுதியிற் றோன்றலாயிற்று. ஆனால் மனநிறைவுக்கு அடையாள மான ஒரு புன்சிரிப்புத் தோன்றப் பெற்றவராய் மனோகரர் அமைதியாகக் கூறுவார்: “என் அன்பிற்குரிய இளையநேசரே, இப்போது தங்கள் மைத்துனரே தமது வழக்கைத் தங்களிடம் எடுத்துப் பேசும்படி யான் விட்டு விடுவதில் தீங்கொன்றும் ல்லையென்று நினைக்கிறேன்.”

66

இல்லை--இதற்குள் அல்ல! இதற்குள் அல்ல!” என்று, அத்தகைய செய்தியில் மிகவும் விரைவது போற் காணப்படும் ஒரு நிகழ்ச்சியிற் பின்வாங்குவாளாய்க் குமுதவல்லி முணு முணுத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/295&oldid=1581673" இலிருந்து மீள்விக்கப்பட்டது