பக்கம்:மறைமலையம் 14.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

❖LDMMLDMOшILD -14❖

வந்து “கோகிலா, அப்பா ஏன் இப்படிப் படுத்திருக்கிறார்கள்? நீ ஏன் விசனமான முகத்தோடும் இருக்கிறாய்? இந்தப்பாரசிக கனவான் யார்?” என்று வினாவினான். உடனே யான் அப்பாரசிக குடும்பத்தாரையும் அங்கு நிகழ்ந்தவற்றையும் பற்றிச் சுருக்கமாய்ச் சொன்னேன். இதைக் கேட்டு அவன் சிறிது மனக் கலக்கமும் அவமானமும் அடைந்தவனாகி முதலில் தன் உறவும் அக்காளும் செய்த குற்றத்தை மன்னிக்கும்படி அப்பாரசிகப் பெருமாட்டி யாரையும் அவர்கணவரையும் வேண்டிக் கொண்டான்;அவர்கள் தாம் அதனைக்குற்றமாகவே நினைக்கவில்லையென்றும் உயர் குணத்தினும் நுட்ப அறிவினும் அன்பினும் சிறந்தவரான அப்பெரியவர் தங்கள் பொருட்டு அத்தனை அபாயகரமான நிலைமையை அடையலானதுதான் தமக்குப் பெருந்துயர மாயிருப்பதென்றும் தெரிவித்து, விரைவிற் படுக்கை சித்தஞ் செய்யும்படி அவனுக்கு வற்புறுத்திச் சொன்னார்கள். மந்த புத்தியுடை வனாகையால் அது செய்வதைவிடுத்துச் சமையற் கட்டிற்குட் போய்த் தன்றாயுடனும் அக்காளுடனும் சண்டையிட லானான்; அப்பெண்பேய்கள் இரண்டும் இவனுக்குச் சிறிதும் அடங்கினவர்கள் அல்லர்; மேலும், இவனுடைய குணமுஞ் செய்கையும் அவ்வளவு நல்லன அல்லவாதலால் இவனிடத்தில் அவர்களுக்குச் சிறிதும் மதிப்பில்லை. இவன் உள்ளே சென்று கோபமாய்ப் பேசவே இவன்தாய் விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு இவனைச் சாடத்துவங்கினாள் என்று சில குறிப்பு களினால் வெளியே தெரிந்து கொண்டேன். இப்பாரசிக குடும்பத்தார்க்கு உள்ளே நடக்கும் இந்தச் சச்சரவு தெரிந்தால் மிகவும் தாழ்வாக அவர்கள் எல்லாரையும் நினைக்க இடந்தரும் என்று நினைத்து, யான் உள்ளேசென்று, இராமசாமி, பார்க்கிறவர்களுக்கு மிகவும் பந்தக்கேடாக இப்படியெல்லாம் நடப்பதற்கு இதுதானா சமயம்? உன் தகப்பனார் உயிர் போனாற்போற் கிடக்கிறார்; அவருக்குப் படுக்கை சித்தப் படுத்துவோம் வா” என்று அழைத்தேன். அவன் என் சொற்களைக் கவனியாதவனாய் அங்கே ஒரு மூலையிலிருந்த ஒரு தடிக்கம்பை எடுத்து, “இந்தச் சிறுக்கிகளை இந்தத் தடியால் அடித்துக் கால் கையை முறிக்கிறேன்பார்; என் அப்பா மாத்திரம் சாகட்டும், இந்தப் பெட்டைக் கழுதைகளை மண்ணுக்குப் போட்டு விடுகிறேன்பார்” என்று வீம்பு பேசுகையில் இவன் அக்காள் இவன்மேற் புலிபோற் பாய்ந்து இவன் கையிலிருந்த தடிக்கம்பைப்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/103&oldid=1582061" இலிருந்து மீள்விக்கப்பட்டது