பக்கம்:மறைமலையம் 14.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

99

குழந்தையைத் தேவ வடிவத்திற் காண்பாய்; அக்குழந்தையின் வடிவந்தோன்றி மறைந்த பின் என்னை நினைப்பையாயின் யான் நின் கட்வுலனுக்கு எதிரே தோன்றுவேன்; என்னைக் கண்ட மூன்றாம் நாள் திரும்பவும் என்னைக்கண்டு அமைதியாக என்னோடும் மேலுலகங்களுக்குப் போதுவை' என்று அருளி மறைந்து போயிற்று. அத்திருவுருவங் கட்டளையிட்டவாறே மறுநாளிரவு என் உறவினர் சிலரோடும் அவள் படுக்கையண்டை சென்று அவளுக்குத் திருநீற்றையள்ளிக் கொடுக்க அன்றோடு அத்தேவதண்டனை நின்று போயிற்று. அதுமுதல் அவள் என்னிடத்து மிகுந்த அச்சமுடையவளாய் நடந்து வந்தனள். என்றாலும், என் அருமைமகவைக் கொலைசெய்த அவளிடத்து அதன்பின் யான் அன்பு பாராட்டியதுமில்லை, அவளை அணுகியது மில்லை. அவளைப்பார்த்த நேரமெல்லாம் அருவருப்பாகவே காலங்கழித்துவந்தேன். பல வருஷங்களுக்குப் பிறகு ஒருநாள் அவள் தனது கொடுங்குணத்தால் எனக்கு மிகுந்த மனவருத்தத்தை உண்டு பண்ணவே, யான் அத்தேவவடிவத்தை நினைந்தேன்; நினைந்த ஒரு நொடிப்பொழுதில் அது கரியகொடிய ருவத்தோடும் அவள் எதிரிற்றோன்றியது. அவள் அதனைக் கண்டு அலறிக் கீழ்விழுந்து மூர்ச்சையானான். அங்ஙனம் நேர்ந்ததற்குப் பிறகு என் எதிரில் அவள் வருவதேயில்லை. அதனாலே தான், முன் ஒருநாள் அவள் உன்னை வைது வருந்துகையில் யான் வந்து கோபிக்கவே, உள் ஓடிப்போனாள். அந்தப் பாரசிகப் பெருமாட்டியாரையும் உன்னையும் அவள் புறம்பழித்துப் பேசிய சமயத்திலும் யான் வரவே அவள் உள் ஓடிப்போனது இந்தக் காரணததினாலேதான். அஃதிருக்கட்டும். அந்த அழகிய தேவவடிவம் அருளிச் செய்தபடியே என் இளம்பருவத்தே யான் இழந்துபோன என் அருமை மகளின் தேவவடிவம் சிறிது நேரத்திற்குமுன் என் கண்ணெதிரே தோன்றியது. இதனால் இன்றையலிருந்து மூன்றாம் நாள் யான் இவ்வுலகத்தைத் துறந்து போவது திண்ணம்” என்று என் மாமனார் சொல்லவே என்னால் ஆற்றமுடியாத துயரம் என் உள்ளத்தே உண்டாயது. ஏதும் பேசாமல் எனது மேல்முன்றானை யால் என் கண்களைப் பொத்திக்கொண்டு பொருமியெழுதேன். சிறிது நேரம் சும்மா இருந்த என் மாமனார் பிறகு என்னை நோக்கிக்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/128&oldid=1582086" இலிருந்து மீள்விக்கப்பட்டது