பக்கம்:மறைமலையம் 14.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கோகிலாம்பாள் கடிதங்கள்

115

அப்படியானால், படித்தவர்களெல்லாரும் உத்தியோகம் பார்க்கவேண்டும்; படிப்பில்லாதவர்கள் மட்டும் வியாபாரம் முதலான மற்றத்தொழில்களைப் பார்க்கவேண்டுமென்பதுதான் உன் கருத்தோ?" என்று கேட்டேன்.

66

‘ஆமா, சொக்காத் தலைப்பாவோடு வெள்ளைவேட்டி உடுத்திக்கொண்டுபோய் உத்தியோகம் பார்த்துப் பணஞ் சம்பாதிப்பது தான் படிப்பிற்கு அழகு. வியாபாரம் பண்ணுவதற்கு படிப்பு ஏன்?” என்றான்.

66

அப்படியானால் உத்தியோகத்தாற் பணஞ்சம்பாதிப்பவர் களுக்கும் வியாபாரத்தாற் பணஞ்சம்பாதிப்பவர்களுக்கும் வேறுபாடு யாது?” என்று வினவினேன்.

66

'உத்தியோகஞ் செய்வோருக்குப் பெருமை உண்டு. எல்லாரும் அவரைக்கண்டு அச்சத்தோடு நடப்பார்கள். வியாபாரிகளுக்கு அவ்வளவு பெருமையும் மதிப்புமில்லை"

என்றான்.

66

நல்லது, உத்தியோகம் பார்ப்பவருக்கு அவ்வளவு பருமையும் மதிப்பும் வருவது அவரைப்பற்றியா அவரது உத்தியோகத்தைப் பற்றியா?” என்று கேட்டேன்.

66

அவருடைய உத்தியோகத்திற்காகத்தான் பெருமையும் மதிப்பும்” என்றான்.

"அப்படியானால்

அவருக்காக

ஏதுபெருமையும்

ஏதுமதிப்பும் இல்லையென்பது பெறப்படுகின்றதன்றோ? உத்தி யோகத்தால் வரும் உயர்வும் மதிப்பும் அவ்வுத்தியோகத்திற்கு உரியனவாய்ப் போகின்றனவேயல்லாமல், அதனைத் தாங்கினவர்க்கு ஏதும் இல்லையே. தனக்குச் சொந்தமல்லாத ஒன்றைக்குறித்துத் தான் பெருமை பாராட்டுவது எவ்வளவு பேதைமை! கூத்துமேடைமேல் அரசவேஷம்பூண்டு ஆடுவோன் தன்னையே ஓர் அரசனாய்ப் பாவித்து மகிழ்ந்தால், அஃது எவ்வளவு நகைப்புக்கிடமாய் இருக்கும்! அதுபோலவே, அரசனுடைய அதிகாரத்தைத் தாங்குவோர் அவ்வதிகாரத் திற்குரிய பெருமையைத் தமதாக நினைத்து மனப்பால் குடித்தல் எவ்வளவு அறியாமையாய் இருக்கின்றது! கற்றதற்குப்பயன் அறிவா, அறியாமையா? கற்றும் அறிவில்லாத உத்தியோகஸ்தரைக் காட்டிலும், வீண்பெருமை பாராட்டாத கல்லாதவரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/144&oldid=1582111" இலிருந்து மீள்விக்கப்பட்டது