பக்கம்:மறைமலையம் 14.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் -14

கதவுகளாற் சாத்திப் பூட்டப்பட்டிருந்தது. அதனருகே சென்று எவரேனும் வெளியே இருந்தால் இந்த ஏழைச் சிறுபெண்மேல் இரக்கம்வைத்து இக்கதவுகளைத் திறந்துவிடுங்கள்!” என்று சொல்லி மன்றாடுங் குரலிற் பலகாற் கூவினேன். ஏதும் விடையில்லை. பின்னரும் பலகாற் கூப்பிட்டேன். ஏதோர் அரவமும் இல்லை. இரண்டுநாள் வண்டித் தொடரில் வந்தமை யாலும், முந்திய இரவிற் கள்வராற் பிடிபட்டு ஏதோர் உணவுமின்றித் திகிலால் மயங்கிக் கிடந்தமையாலும் மேலும் மேலுங் கூவியழைப்பதற்கு வலிவின்றிக்களைத்துப் பிறகு இரண்டுமணி நேரம் வரையிற் சும்மா இருந்துவிட்டேன். அவ்விரண்டுமணி நேரஞ் சென்றபின் அம்முன்வாயிற் கதவிற்றைத்த பூட்டினுள்ளே, ஒருபெருஞ் சாவி கரகரவென்று திருப்பும் ஓசை வந்தது. இப்போது கதவு திறக்கப் போகிறதென்று தெரிந்தேன்.எத்தகைய கொடியோரை எந்த இரக்கமற்ற நிலையிற் காணப்போகிறேனோ என்று நேற்றிரவு போல் திரும்பப் பெருந்திகில் கொண்டேன். கதவுகள் படீரெனத் திறந்தன.

நீண்டு உயர்ந்து எலுமிச்சப்பழம் போன்ற நிறம் உடைய ஒரு பார்ப்பனக்கிழவர் கையிற் பூந்தட்டு ஏந்தியபடியாய் மெல்ல நடந்து உள் நுழையவும், அவர்க்குப் பின்னே சிறிது எட்டி இருபத்தைந்து வயதுள்ள ஒருமாதர் வரவுங் கண்டேன். என் நெஞ்சம் ஒருவாறு பதைப்பு நீங்கி அமைதியுற்றது. என்னைக் கண்டதும் அவர் திடுக்கும் வியப்பும் உற்றவராகி எனக்குத் தெரியாத ஒரு மொழியில் ஏதேதோ என்னைக் கேட்டார். எனக்குத் தமிழ்மொழி மட்டுந்தான் தெரியும், வேறுமொழி தெரியாதென்று தமிழிலேயே சொல்லிக் கையாலுங் குறிப்பித்தேன். அவர் தமிழ் தெரிந்தவர் போலத் தலையை அசைத்துக் கொண்டாரேயல்லாமல் வேறொன்றும் அப்போது என்னிடம் பேசவில்லை. ஆனால், அவர் தமக்குப் பின் வந்த மாதரைப் பார்த்து ஏதேதோ சொல்ல உடனே அவள் என்னைத் தன் பின்னே வரும்படி கைகாட்டி அழைத்தாள். அவள் முன் செல்ல யான் அவள்பின்னே சொல்லலானேன். என்னைச் சிறையிட்ட குகை வாயிலின் முன்னே திறப்பான வெளியில்லை. அவ்வாயிலின் வெளியேயுங் குறுகலான வழியே சென்றது. மேலுங் கீழும் இரு பக்கத்துமெல்லாம் மலைகளே. வழியானது பாம்பு நெளிபோல் வளைந்து வளைந்து சென்றது; இடங்களில் எறியும் வேறு சில இடங்களில் இறங்கியுஞ்

சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/231&oldid=1582416" இலிருந்து மீள்விக்கப்பட்டது