பக்கம்:மறைமலையம் 14.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

233

டத்தில் அந் நீரோட்டம் மூன்றடியகலமும், வேறு சில இடத்தில் நான்கடியகலமும் இருந்தன. அதற்கு நேர்முகமாயிருந்து ஈரக்காற்று விறுவிறுவென்று வீசியது. இக்காற்று இல்லை யானால் யான் மூக்சு அடைபட்டு அங்கேயே இறந்து போயிருப்பேன். நீரோட்டமானது என்னை மிகுவிரைவாய் இழுத்துச் சென்றது. யான் குடத்தின் உதவியால் ஏதொரு வருத்தமும் இன்றி மிதந்து சென்றேன். நீரின் விரைவை நோக்கநோக்க அது வரவரச் சரிந்துசெல்லும் பாறையினூடே செல்லுகின்றதென அறிந்தேன். 'இவ்வளவு விரைவாய்ச் செல்லும் இஃது எங்கே செங்குத்தான மலையின் ஓரத்திற்சென்று வழிகின்றதோ' எனவும், ‘அங்ஙனம் வழியுமானால் யான் இந் நீரோட்டத்தாற் கீழ் இழுக்கப்பட்டு வீழ்ந்து சாவது திண்ணம்’ எனவும் உணர்ந்து திகில் கொண்டேன். ஆனாலும், இப்போது என்னாற் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. ஆதலால், மனந்தேறி 'இறைவிவிட்டபடி விடட்டும்' என்று என்னைக் கைவிட்ட நினைவோடு சென்றேன்... ஆனாலும், இடையிடையே என் கால்களைக் கீழ் இறக்கி நிலம் தென்படுகிறதா என்று பார்த்தேன் ஒரு சிறிதுந்தென்படவில்லை. இந்நீரோட்டம் மலையினூடு செல்வதால், ஒரேயிருளாயிருந்தது. இவ்வாறு நெடுநேரம் இந்நீரிற் சென்றேன். ஏறக்குறைய ஏழெட்டுமணிநேரம் யான் தண்ணீரில் இருந்தமையாலும், அம்மலையருவிநீர் மிகவுங் குளிர்ந்திருந் தமையாலும் என் உடம்பிற் குளிரும் விறைப்பும் உண்டாயின. 'அந்தப் பாரசிக கனவானும் என் தமையனும் இருக்கும் நிலைமையை அந்தப் பாரசிகப் பெருமாட்டியாரிடம் சென்று தெரிவித்த பின் உயிர் போகுமாயின் அஃது எனக்கொரு பேர் ஆறுதலாயிருக்கும். அதுவரையில் எம்பெருமாட்டிஎன்னை உயிரோடு வைப்பையோ' என்று இறைவியை நினைந்து உருகி அழுதேன். பின்னுஞ் சிறிது நேரஞ்செல்ல, மறுபடியும் என் கால்களைக் கீழே இறக்கி இறக்கித் தடவினேன்: இப்போது உருண்டைக் கற்கள் என்காலிற் றட்டின் உடனே ஒரு பெருங்கிளர்ச்சி அடைந்தேன். இப்போது வரவர அந்நீரோட்டம் அகன்று காட்டியது; சிறிது வெளிச்சமும் வந்தது; அதன் இருபுறத்துள்ள மலைகளும் என் கண்கட்குப் புலனாயின; இப்போது பதினைந்தடி அகலமுள்ளதாய் அந் நீரோட்டந் தோன்றிற்று; அஃது அகல அகல ஆழங் குறைந்தது இப்போ தென்கால்கள் அடிநிலத்தே பாவின; தண்ணீர் கழுத்தளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/262&oldid=1582547" இலிருந்து மீள்விக்கப்பட்டது