பக்கம்:மறைமலையம் 14.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மறைமலையம் -14

அச்சொற்களைக் கேட்டதும் அப் பெரியவர் திரும்பிப் பார்த்து அம்மையார் முகத்தை உற்றுநோக்கி "ஐயோ! கமலாம்பா! என் அருமைக் குழந்தே! இத்தனை வருஷங்களாய்க் காணாமற் போய் இப்போது போய் இப்போது இங்கே எப்படி இந்த ஆண் கோலத்தில் வந்தாய்? இவன் உன் தமையன் குமாரசாமி யல்லவா!” என்று சொல்கையில் அவர் தமது துயரத்தை ஆற்றமுடியாதவராய் மேற்கொண்டு பேச மாட்டாமல் உள்ளம் நைந் துருகி அழுதார். இந்நிகழ்ச்சியைப் பார்த்ததும் எனக்கொன்றும் விளங்காமல் வியப்புந் திகைப்பும் அடைந்தேனாயினும், அவ்விருவர் துயரத்தையுங் கண்டு மனஞ் சிறிதுந் தாங்காமல் யானுங் கண்ணீர் சிந்தினேன். என் தமையனும் பாரசிகப் பெருமானும் ஏதும் பேசாமல் மரம்போல் அசைவற்று நின்றனர். அதிகாரியுஞ் சேவகரும் எங்கள் ஆட்களுந் தமக்கொன்றும் விளங்காமையால் தாம் ஒருவரையொருவர் பார்த்து ‘ஈதென்ன?' என்று தம்மைத் தாம் வினவும் குறிப்புடைய வராய் வியப்புற்று நின்றனர். இவருள் நுண்ணறிவும் மனத் திட்பமும் வாய்ந்தவரான அவ்வதிகாரி எங்கள் நிலைமையைப் பார்த்து இரக்க முடையவராய் அந்தப் பெரியவரை நோக்கி “உங்கள் மகனுக்கு அபாயம் இல்லை. இரத்தம் நின்றுபோய் விட்டது. திறமான சிகிச்சை செய்தாற் பிழைத்துக்கொள்வார். இப்போது நீங்கள் இங்கே வருந்திக்கொண்டிருப்பதிற் பயனில்லை. மேற்கொண்டு ஆக வேண்டுவதைப் பார்க்க வேண்டும். உங்கள் மகனை நாளைக் காலையில் பம்பாய் வைத்திய சாலைக்குக் கொண்டுபோக வேண்டும்”. என்று சொன்னார் அச்சொல்லைக் கேட்டு அவரும் அம்மையாரும் யாங்களும் L மனந்தேறினோம். அந்தப் பெரியவரின் மகனார் இன்னும் உணர்வற்ற நிலைமையிலேயே கிடந்தார். விடிந்தவுடன் மயக்கந் தெளியுமென்றும், அவர் இறக்க மாட்டா ரென்றும் ஆடவர் எல்லாருங் கூறினர்.

சிறிதுமுன் நடந்த சண்டையில் உயிரோடு பிடிபட்டவர் நான்கு கள்வரே யாகையால், இறந்துபட்ட மற்ற அறுவரில் நால்வர் கள்வராகவும் மற்றிரண்டுபேர் வேறு ஆட்களாகவும் இருக்கவேண்டுமென உணர்ந்தேன். இத்தனை துன்பங் களுக்குங் காரணமாயிருந்தது, இப்போது இறந்துபட்ட அவ்விருவர் யாராயிருக்கலாமென்று யான் அப்பெரியவரைக் கேட்டேன். அவர்தாமும் அவர்களை இதற்கு முன் பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/293&oldid=1582589" இலிருந்து மீள்விக்கப்பட்டது